பொது செய்தி

இந்தியா

நடுவானில் பயணிக்கு சிகிச்சை மத்திய அமைச்சருக்கு பாராட்டு

Added : நவ 18, 2021
Share
Advertisement
புதுடில்லி:விமான பயணத்தில் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்ட பயணிக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளித்து காப்பாற்றிய மத்திய நிதித் துறை இணையமைச்சர், டாக்டர் பகவத் கராத்துக்கு, பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.டில்லியில் இருந்து மும்பை சென்ற விமானத்தில் மத்திய நிதித் துறை இணை அமைச்சரும், டாக்டருமான பகவத் கராத் பயணம் செய்தார். அப்போது ஒரு பயணி திடீரென மயக்கம்
 நடுவானில் பயணிக்கு சிகிச்சை மத்திய அமைச்சருக்கு பாராட்டு

புதுடில்லி:விமான பயணத்தில் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்ட பயணிக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளித்து காப்பாற்றிய மத்திய நிதித் துறை இணையமைச்சர், டாக்டர் பகவத் கராத்துக்கு, பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

டில்லியில் இருந்து மும்பை சென்ற விமானத்தில் மத்திய நிதித் துறை இணை அமைச்சரும், டாக்டருமான பகவத் கராத் பயணம் செய்தார். அப்போது ஒரு பயணி திடீரென மயக்கம் அடைந்து சுய நினைவை இழந்தார். உடனே பகவத், அந்த பயணிக்கு அவசர சிகிச்சை அளித்தார். இதையடுத்து பயணிக்கு நினைவு திரும்பியது.
இது குறித்து பகவத் கராத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:அந்த பயணியின் உடல் வியர்த்து இருந்தது. இதயத் துடிப்பும் குறைந்திருந்தது. உடனே நான் பயணியை இரு இருக்கையை இணைத்து அதில் கிடத்தினேன். சட்டை பொத்தான்களை கழற்றி மெதுவாக இதயத்தை மசாஜ் செய்தேன்.அவர் கால்களை தலையணைக்கு மேல் வைத்தேன். இதனால் ரத்த ஓட்டம் இதயத்திற்கு பாய்ந்தது. சில நிமிடங்களில் அந்தப்பயணிக்கு நினைவு திரும்பியது.

உடனே குளுகோஸ் தண்ணீர் கொடுத்தேன். அதை குடித்ததும் அவர் தெம்பாக பேசினார். இவ்வாறு அவர் கூறினார்.தக்க சமயத்தில் செயல்பட்டு பயணியின் உயிரைக் காப்பாற்றிய பகவத் கராத்தை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X