பொது செய்தி

தமிழ்நாடு

உப்பூர், உடன்குடி மின் திட்டங்கள் ஒப்பந்த நிறுவனத்திடம் ஆலோசனை

Added : நவ 18, 2021
Share
Advertisement
சென்னை:ராமநாதபுரம், உப்பூர் அனல் மின் நிலைய கட்டுமானம்; உடன்குடியில் புதிய மின் நிலையம் ஆகிய இரண்டு திட்டங்களில் எதற்கு செலவு குறைவு என்பது குறித்து, தனியார் ஒப்பந்த நிறுவனத்திடம், மின் வாரியம் ஆலோசனை கேட்க உள்ளது.தமிழக மின் வாரியம், ராமநாதபுரம் மாவட்டம், உப்பூரில் தலா 800 மெகா வாட் திறனில் இரு அலகுகள் உடைய அனல் மின் நிலையத்தை அமைத்து வருகிறது. கட்டுமான பணி, 2016ல்

சென்னை:ராமநாதபுரம், உப்பூர் அனல் மின் நிலைய கட்டுமானம்; உடன்குடியில் புதிய மின் நிலையம் ஆகிய இரண்டு திட்டங்களில் எதற்கு செலவு குறைவு என்பது குறித்து, தனியார் ஒப்பந்த நிறுவனத்திடம், மின் வாரியம் ஆலோசனை கேட்க உள்ளது.

தமிழக மின் வாரியம், ராமநாதபுரம் மாவட்டம், உப்பூரில் தலா 800 மெகா வாட் திறனில் இரு அலகுகள் உடைய அனல் மின் நிலையத்தை அமைத்து வருகிறது. கட்டுமான பணி, 2016ல் துவங்கியது. திட்ட செலவு 12 ஆயிரத்து 778 கோடி ரூபாய்.உப்பூர் மின் நிலையத்திற்கு தேவையான நிலக்கரி, துாத்துக்குடி துறைமுகத்தில் இருந்து எடுத்து வரப்பட உள்ளது. இதற்காக, ராமநாதபுரம் - துாத்துக்குடி ரயில் பாதையில் இருந்து, உப்பூர் மின் நிலையத்திற்கு, 28 கி.மீ.,ருக்கு தனி ரயில் பாதை அமைக்க வேண்டும்.ரூ.3,000 கோடிஇதில் தொடர் செலவும் உள்ளது உள்ளிட்ட காரணங்களால், 3,000 கோடி ரூபாயில் பணிகள் முடிந்த நிலையில், மின் நிலைய கட்டுமானத்தை நிறுத்த மின் வாரியம் முடிவு செய்தது.

உப்பூர் மின் திட்டத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம், நடப்பாண்டு மார்ச்சில் தடை விதித்ததும் இந்த முடிவுக்கு காரணம்.உப்பூர் திட்ட நிதியில், துாத்துக்குடியில் ஏற்கனவே அமைக்கப்பட்டு வரும் உடன்குடி அனல் மின் நிலையத்திற்கு அருகில், உடன்குடி விரிவாக்கம் என, தலா 800 மெகா வாட் திறனில் இரு அலகுகள் உடைய புதிய மின் நிலையம் அமைக்க முடிவானது.

இந்நிலையில், உப்பூர் மின் திட்டம் தொடர்பான பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம் ஜூலையில் தடை விதித்தது. இதனால், உப்பூர் மின் நிலைய கட்டுமான பணிகளை, அதே இடத்தில் தொடரலாமா அல்லது உடன்குடிக்கு மாற்றலாமா என்பது குறித்து, மின் வாரியம் தமிழக அரசிடம் ஆலோசனை கேட்டது; மறு ஆய்வு செய்யுமாறு அரசும் தெரிவித்தது.

இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:மின் வாரிய நிதி நிலையை சரி செய்ய எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து, 'எர்னஸ்ட் அண்ட் யங்' என்ற தனியார் ஒப்பந்த நிறுவனம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.


இறுதி முடிவு



அந்த நிறுவனத்திடம், உப்பூர் மின் நிலைய கட்டுமானத்தை அங்கேயே தொடர்வது அல்லது உடன்குடியில் புதிய மின் நிலையம் அமைப்பதில், எது செலவு குறைவு என்பது குறித்து ஆலோசனை கேட்கப்பட உள்ளது. ஒரு மாதத்தில் அறிக்கை பெறப்படும். அதன் அடிப்படையில், எந்த இடத்தில் மின் நிலையம் அமைப்பது என்பது குறித்து, இறுதி முடிவு எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X