5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

Added : நவ 18, 2021
Share
Advertisement
ஸ்ரீநகர்:ஜம்மு - காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் நேற்று நடந்த வெவ்வேறு சம்பவங்களில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவர் உட்பட ஐந்து பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.ஜம்மு - காஷ்மீரின் குல்காம் மாவட்டம் கோப்லபோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து பாதுகாப்பு

ஸ்ரீநகர்:ஜம்மு - காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் நேற்று நடந்த வெவ்வேறு சம்பவங்களில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவர் உட்பட ஐந்து பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஜம்மு - காஷ்மீரின் குல்காம் மாவட்டம் கோப்லபோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து பாதுகாப்பு படையினர் அந்தப் பகுதியை சுற்றி வளைத்தனர். அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுடத் துவங்கினர்.

பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுத்தனர்.இதில், டி.ஆர்.எப்., எனப்படும் எதிர்ப்புப் படை என்ற பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவரான அபாக் சிகந்தர் உட்பட இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.போம்பே பகுதியில் நடந்த மற்றொரு சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X