தமிழ்நாடு

கோவையில் 3,500 வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு போராட்டம்

Added : நவ 18, 2021
Share
Advertisement
கோவை: கோவை மாவட்டத்தில், 3,500க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.கோவை இன்றியமையா பண்டங்கள் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் (இ.சி.,கோர்ட்), கடந்த 8ம் தேதி, கஞ்சா கடத்தல் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, குற்றம் சாட்டப்பட்ட நபர் தரப்பில், வக்கீல் கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதனால், குற்றம் சாட்டப்பட்ட நடம்மீண்டும் சிறையில் அடைக்க

கோவை: கோவை மாவட்டத்தில், 3,500க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.கோவை இன்றியமையா பண்டங்கள் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் (இ.சி.,கோர்ட்), கடந்த 8ம் தேதி, கஞ்சா கடத்தல் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, குற்றம் சாட்டப்பட்ட நபர் தரப்பில், வக்கீல் கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதனால், குற்றம் சாட்டப்பட்ட நடம்மீண்டும் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.இது தொடர்பாக வக்கீல் சங்க அவசர பொதுக்குழு கூட்டம் நடந்தது. வரும் 20ம் தேதி வரை நான்கு நாட்கள் நீதிமன்றங்களை புறக்கணிக்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், மதுக்கரை, சூலுார், வால்பாறை உட்பட மாவட்டம் முழுவதும், 55க்கும் மேற்பட்ட நீதின்றங்களை, 3,500க்கும் மேற்பட்ட வக்கீல்கள் நேற்று புறக்கணித்தனர். இதனால் அனைத்து நீதிமன்றங்களில் வழக்கு விசாரணை பாதிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X