இதையும் கவனியுங்க கரும் புகைகளை கக்கும் கனரக வாகனங்கள்

Added : நவ 18, 2021
Share
Advertisement
விருதுநகர்- விருதுநகர் மாவட்டத்தில் கரிய வாயுக்களை கக்கும் கனரக வாகனங்களால் காற்று மாசுபடுவதோடு கொடிய நோய்களுக்கும் வழி ஏற்படுகிறது. மாவட்டத்தில் பட்டாசு, தீப்பெட்டி, பருப்பு, உளுந்து, வத்தல் வணிகம், காலண்டர், டயரி, பாண்டேஜ் உற்பத்தி என பல்வேறு தொழில் தளங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் இங்கிருந்து மினிலாரி, லாரி, ட்ரக் போன்ற கனரக வாகனங்கள் மூலம் உற்பத்தி

விருதுநகர்- விருதுநகர் மாவட்டத்தில் கரிய வாயுக்களை கக்கும் கனரக வாகனங்களால் காற்று மாசுபடுவதோடு கொடிய நோய்களுக்கும் வழி ஏற்படுகிறது. மாவட்டத்தில் பட்டாசு, தீப்பெட்டி, பருப்பு, உளுந்து, வத்தல் வணிகம், காலண்டர், டயரி, பாண்டேஜ் உற்பத்தி என பல்வேறு தொழில் தளங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் இங்கிருந்து மினிலாரி, லாரி, ட்ரக் போன்ற கனரக வாகனங்கள் மூலம் உற்பத்தி பொருட்கள் பல்வேறு மாவட்டங்கள், கேரளா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களுக்கு செல்கின்றன. இவற்றில் புகைப்போக்கிகளை வட்டார போக்குவரத்து அலுவலக ஆய்வின் போது மட்டும் பராமரிக்கும் டிரைவர்கள் மற்ற நேரங்களில் கண்டுக்கொள்வதில்லை. பெயருக்கு மட்டுமே மாசுக்கட்டுப்பாட்டு சான்றை வாங்கி வைக்கின்றனர். வாகன புகை அளவை சோதித்து ஆறு மாதத்திற்கு ஒரு முறை சான்று பெற வேண்டும். ஆனால் எப்.சி., புதுப்பிக்கும் நேரங்களில் மட்டும் இச்சான்றை பெறுகின்றனர். புகையின் அளவு கனரக டீசல் வாகனங்களில் 65 எச்.எஸ்.யூ.,க்கு கீழ் இருக்க வேண்டும். ஆனால் மாவட்ட ரோடுகளில் செல்லும் பெரும்பாலான கனரக வாகனங்கள் அதிகளவில் புகையை கக்கி கொண்டே செல்கின்றன. இதனால் காற்று மாசுப்படுவதுடன் சுவாச கோளாறுகள், ஆஸ்துமா உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகிறது. பெட்ரோல் கார், டூவீலர்களில் வெளியாகும் கரும்புகையில் கார்பன் மோனாக்ஸைடு, சல்பர் போன்ற நச்சுக்கள் அதிகம் இருப்பதால் புற்று நோய் கூட ஏற்பட வாய்ப்புள்ளது. போலீசார் ஹெல்மெட் தணிக்கை செய்வது போல் அதிக புகை வெளிப்படுத்தும் வாகனங்களில் மாசுக்கட்டுப்பாட்டு சான்று இருக்கிறதா என சோதிக்க வேண்டும். விதிமீறும் வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதன் மூலம் பெருமளவில் மாசு குறைய வாய்ப்புள்ளது.வட்டார போக்குவரத்து துறையும் இதில் கவனம் கொள்ள வேண்டும்...........உரிய நடவடிக்கை வேண்டும் பொருட்கள் பரிமாற்றத்தின் வாயிலாக நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் கனரக வாகனங்களின் பங்கு அளப்பரியது. நாட்டின் தலைநகரையே இன்று வரை மாசுப்புகை அச்சுறுத்தி வருகிறது. மாநிலத்தின் முக்கிய தொழில் மாவட்டமான நமக்கும் அந்த நிலை வராத வகையில் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து வாகனங்களில் மாசு கட்டுப்பாட்டு சான்றை சரிபார்க்க வேண்டும்.ரெங்கராஜா, சமுக ஆர்வலர்.,விருதுநகர்.................

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X