குல்பூஷண் ஜாதவ் விடுதலையாக வாய்ப்பு| Dinamalar

குல்பூஷண் ஜாதவ் விடுதலையாக வாய்ப்பு

Added : நவ 18, 2021
Share
இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தால் துாக்கு தண்டனை விதிக்கப்பட்ட இந்தியரான குல்பூஷண் ஜாதவ், தன் தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய உரிமை அளிக்கும் மசோதா, பாக்., பார்லிமென்ட் கூட்டு கூட்டத்தில் நிறைவேற்றியது. இந்திய கடற்படையில் இருந்து ஓய்வு பெற்ற அதிகாரியான குல்பூஷண் ஜாதவ், 51, கடந்த 2016ல், பாக்., ஆக்கிரமிப்பு பகுதிகளில் ஒன்றான பலுசிஸ்தானில் அந்நாட்டு

இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தால் துாக்கு தண்டனை விதிக்கப்பட்ட இந்தியரான குல்பூஷண் ஜாதவ், தன் தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய உரிமை அளிக்கும் மசோதா, பாக்., பார்லிமென்ட் கூட்டு கூட்டத்தில் நிறைவேற்றியது.

இந்திய கடற்படையில் இருந்து ஓய்வு பெற்ற அதிகாரியான குல்பூஷண் ஜாதவ், 51, கடந்த 2016ல், பாக்., ஆக்கிரமிப்பு பகுதிகளில் ஒன்றான பலுசிஸ்தானில் அந்நாட்டு ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார்.இவர் பாகிஸ்தானில் இந்தியாவுக்காக உளவு பார்த்ததாக, அந்நாட்டு ராணுவம் குற்றஞ்சாட்டியது. இந்த வழக்கில், குல்பூஷண் ஜாதவுக்கு துாக்கு தண்டனை விதித்து, பாக்., ராணுவ நீதிமன்றம் உத்தரவிட்டது.துாக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருந்த நிலையில், ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தை இந்திய அரசு அணுகியது.
அப்போது, 'ராணுவ நீதிமன்றம் வழங்கிய துாக்கு தண்டனையை எதிர்த்து, குல்பூஷண் ஜாதவ் மேல்முறையீடு செய்ய உரிமை வழங்கப்பட வேண்டும்' என, சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டது.இதை ஏற்று, பாகிஸ்தான் பார்லிமென்டின் 'தேசிய அசம்பிளி' யில் ஜூன் மாதம் மசோதா நிறைவேற்றப்பட்டது.இந்த மசோதா பாக்., பார்லி.,யின் சென்ட் சபையில் இரண்டு முறை நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில் பாகிஸ்தான் பார்லிமென்டின் இரு சபைகளின் கூட்டு கூட்டம் நடந்தது. இதில், தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய குல்பூஷணுக்கு அனுமதிஅளிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதன் வாயிலாக ராணுவ நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட துாக்கு தண்டனையை எதிர்த்து, பாக்., நீதிமன்றத்தில் குல்பூஷண் ஜாதவ் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு கிடைத்து உள்ளது; இது, அவரது விடுதலையில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X