போலீஸ் செய்திகள்

Added : நவ 18, 2021
Share
Advertisement
போலீசுக்கு மரியாதைஅருப்புக்கோட்டை: டவுன் போலீஸ் ஸ்டேஷன் காவலர் கணநாதன் 44, நேற்று முன் தினம் இரவு மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். டவுன் ஸ்டேஷனில் அவரது உருவ படத்திற்கு இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், ராஐ புஸ்பம், போலீசார்கள் அஞ்சலி செலுத்தினர்.டிரைவரை தாக்கிய மூவர் கைதுசிவகாசி: ராஜதுரை நகர் 24வது தெருவைச் சேர்ந்தவர் டிரைவர் பெரியசாமி 26 . எஸ்.எம்.எஸ் டிரான்ஸ்போர்ட்

போலீசுக்கு மரியாதைஅருப்புக்கோட்டை: டவுன் போலீஸ் ஸ்டேஷன் காவலர் கணநாதன் 44, நேற்று முன் தினம் இரவு மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். டவுன் ஸ்டேஷனில் அவரது உருவ படத்திற்கு இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், ராஐ புஸ்பம், போலீசார்கள் அஞ்சலி செலுத்தினர்.டிரைவரை தாக்கிய மூவர் கைதுசிவகாசி: ராஜதுரை நகர் 24வது தெருவைச் சேர்ந்தவர் டிரைவர் பெரியசாமி 26 . எஸ்.எம்.எஸ் டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் வீரபுத்திரனிடம் 26, ரூ. ஒரு லட்சம் கடனாக வாங்கி பணத்தை திருப்பி தரவில்லை . வீரபத்திரன் ,இவரது நிறுவன ஊழியர்கள் மாரிச்செல்வம் 25, சாந்தாராம் 19, முருகேசன் 33 ,ஆகியோர் பெரியசாமியை மது பாட்டிலால் தாக்கினார். மாரனேரி போலீசார் வீரபுத்திரன், முருகேசனை கைது செய்தனர். மற்றவர்களை தேடுகின்றனர்.விபத்தில் சிறுவன் உட்பட 4 பேர் காயம்சிவகாசி: திருத்தங்கல் எஸ்.என்.புரம் திருப்பதி நகரை சேர்ந்தவர் பொன்ராஜ் 36. உறவினர் கார்மேககண்ணன் 25 , உடன் டூ வீலரில் எஸ். என்.புரம் ரோட்டில் சென்றனர். எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மற்றொரு டூவீலரில் மோதினர். பொன்ராஜ், கார்மேககண்ணன், மற்றொரு டூவீலரில் வந்த விஜயகரிசல்குளம் மணிமுத்து 41, ஆதித்யா 14, காயமடைந்தனர். திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.பெண்ணிடம் செயின் பறிப்புகாரியாபட்டி: வெற்றிலைமுருகன்பட்டியை சேர்ந்தவர் வல்லப்பன்பட்டி அரசு பள்ளியில் சமையலர் முத்துலட்சுமி 44. வேலைக்கு நடந்து செல்லும் போது அந்த வழியாக டூவீலரில் வந்தவர் அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலி செயினை பறித்து தப்பினார். காரியாபட்டி இன்ஸ்பெக்டர் மூக்கன், எஸ்.ஐ.,க்கள் அசோக்குமார், ஆனந்தஜோதி கண்மாய் பகுதியில் மறைந்திருந்த தேனுாரை சேர்ந்த அழகுராஜாவை 35, கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X