அரசியல் செய்தி

தமிழ்நாடு

பள்ளி, விடுதி கட்டடங்கள் திறப்பு

Added : நவ 18, 2021
Share
Advertisement
சென்னை:ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ - மாணவியருக்காக, 23.78 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள, விடுதிகள் மற்றும் பள்ளி கட்டடங்களை, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, திண்டுக்கல், திருச்சி, திருப்பத்துார், நாமக்கல், நீலகிரி மாவட்டங்களில், 23.78 கோடி ரூபாயில், 10 விடுதி
 பள்ளி, விடுதி கட்டடங்கள் திறப்பு

சென்னை:ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ - மாணவியருக்காக, 23.78 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள, விடுதிகள் மற்றும் பள்ளி கட்டடங்களை, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, திண்டுக்கல், திருச்சி, திருப்பத்துார், நாமக்கல், நீலகிரி மாவட்டங்களில், 23.78 கோடி ரூபாயில், 10 விடுதி கட்டடங்கள்; மூன்று பள்ளி கட்டடங்கள் கட்டப்பட்டு உள்ளன.

இவற்றை,தலைமைச் செயலகத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே முதல்வர் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர் கயல்விழி, தலைமைச் செயலர் இறையன்பு, ஆதிதிராவிடர் நலத்துறை முதன்மை செயலர் மணிவாசன், தாட்கோ மேலாண் இயக்குனர் விவேகானந்தன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.


செலவு தொகை உயர்வு

தமிழகத்தில், ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ், 183 கல்லுாரி மாணவர் விடுதிகள்; 1,143 பள்ளி மாணவர் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் தங்கி படிக்கும், மாணவ - மாணவியர், முடி வெட்டிக் கொள்வது, எண்ணெய், சோப்பு, சிகைக்காய், சலவைத்துாள் வாங்குவது போன்ற பல்வகை செலவுகள் உள்ளன.இதற்காக, பள்ளி மாணவர்களுக்கு தலா 50 ரூபாய்; கல்லுாரி மாணவர்களுக்கு தலா 75 ரூபாய் மாதம் தோறும் வழங்கப்பட்டு வந்தது. இத்தொகை இரண்டு மடங்காக உயர்த்தி வழங்கப்படும் என, அமைச்சர் கயல்விழி சட்டசபையில் அறிவித்தார்.
அதன்படி, பள்ளி மாணவர்களுக்கு மாதம் 100 ரூபாய்; கல்லுாரி மாணவர்களுக்கு 150 ரூபாய் என உயர்த்தி வழங்க, நிர்வாக அனுமதி அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.இதற்கான அரசாணையை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலர் மணிவாசன் பிறப்பித்துள்ளார்.


23 வாரிசுகளுக்கு பணி

கால்நடை பராமரிப்பு துறையில், பணியின்போது இறந்த 23 பேரின் வாரிசுகளுக்கு, கருணை அடிப்படையில், இளநிலை உதவியாளர். கால்நடை பராமரிப்பு உதவியாளர், பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர், காவலர் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கப் பட்டன.இந்நிகழ்ச்சியில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கால்நடை துறை கூடுதல் தலைமை செயலர் ஜவஹர், கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ பணிகள் இயக்குனர் ஞானசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X