போலீஸ் செய்தி

Added : நவ 18, 2021
Share
Advertisement
லாட்டரி விற்ற 3 பேர் கைதுசிவகங்கை: காரைக்குடி அருகே புதுவயலில் நவ.,16 அன்று காலை 11:30 மணிக்கு சொக்கலிங்கம் மகன் விஜய் 36, முருகப்பன் மகன் வீரசேகர் 33, ஆகிய இருவரும் தடை செய்யப்பட்ட லாட்டரி டோக்கன் 9, ரூ.600 வைத்திருந்தனர். சாக்கோட்டை எஸ்.ஐ., சேகர் அவர்களை கைது செய்தார். சிங்கம்புணரி வைத்தியர்கோவில் தெருவில் தடை செய்யப்பட்ட லாட்டரி வைத்திருந்ததாக ராஜேந்திரன் 54, என்பவரை கைது செய்து 4

லாட்டரி விற்ற 3 பேர் கைதுசிவகங்கை: காரைக்குடி அருகே புதுவயலில் நவ.,16 அன்று காலை 11:30 மணிக்கு சொக்கலிங்கம் மகன் விஜய் 36, முருகப்பன் மகன் வீரசேகர் 33, ஆகிய இருவரும் தடை செய்யப்பட்ட லாட்டரி டோக்கன் 9, ரூ.600 வைத்திருந்தனர். சாக்கோட்டை எஸ்.ஐ., சேகர் அவர்களை கைது செய்தார். சிங்கம்புணரி வைத்தியர்கோவில் தெருவில் தடை செய்யப்பட்ட லாட்டரி வைத்திருந்ததாக ராஜேந்திரன் 54, என்பவரை கைது செய்து 4 லாட்டரி டோக்கன், ரூ.1,300யை எஸ்.ஐ., குகன் பறிமுதல் செய்தார்.டூவீலர் விபத்தில் பலிகாரைக்குடி: கோட்டையூர் அரிசி ஆலை கணக்காளர் சுப்பிரமணி 68. நேற்று முன்தினம் டூவீலரில் ஸ்ரீராம் நகர் அருகே சென்றார். வேகத்தடையை கடக்கும் போது நிலைதடுமாறி விழுந்ததில் காயமுற்றார். காரைக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று பலியானார். பள்ளத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.மது விற்ற 2 பேர் கைதுமானாமதுரை: மறவர் தெரு லிங்கத்துரை 36, கார்த்தி 38. மது விற்றனர். போலீசார் அவர்களை கைது செய்து மதுபாட்டிலை பறிமுதல் செய்தனர்.கஞ்சா விற்றவர் கைதுகாரைக்குடி: குன்றக்குடி, ஓ.சிறுவயல் ஊரணி பகுதியில் கஞ்சா விற்ற கலிய பெருமாளை 41, போலீசார் கைது செய்து பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.தற்கொலைகாரைக்குடி: கழனிவாசல் ரவிச்சந்திரன் மகன் பாலிடெக்னிக் மாணவர் அஸ்வின் 17. தொடர்ந்து கல்லுாரிக்கு போகாமல் இருந்ததால் கண்டித்துள்ளனர். மனமுடைந்த அவர் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X