பொது செய்தி

தமிழ்நாடு

ராணுவ வீரர்கள் மனைவியருக்கு தொழிற்பயிற்சி

Added : நவ 18, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:உயிரிழந்த ராணுவ வீரர்களின் மனைவியருக்கு தொழிற்பயிற்சி அளிக்கவும், குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கவும், தொண்டு நிறுவனம் முன் வந்துள்ளது.நாட்டையும், நாட்டு மக்களையும் காக்கும் பணிகளில், இந்திய ராணுவ வீரர்கள், தங்கள் இன்னுயிரை தியாகம் செய்து வருகின்றனர். இதனால், சிறு வயதிலேயே கணவனை இழந்த வீரமங்கைகள், சிறு குழந்தைகளுடன் வாழ்க்கை பயணத்தை தனியாக தொடங்கும்

சென்னை:உயிரிழந்த ராணுவ வீரர்களின் மனைவியருக்கு தொழிற்பயிற்சி அளிக்கவும், குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கவும், தொண்டு நிறுவனம் முன் வந்துள்ளது.
நாட்டையும், நாட்டு மக்களையும் காக்கும் பணிகளில், இந்திய ராணுவ வீரர்கள், தங்கள் இன்னுயிரை தியாகம் செய்து வருகின்றனர். இதனால், சிறு வயதிலேயே கணவனை இழந்த வீரமங்கைகள், சிறு குழந்தைகளுடன் வாழ்க்கை பயணத்தை தனியாக தொடங்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
அவர்கள், பெரும்பாலும், கிராமத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். வீர மரணம் அடைந்த வீரர்களுடைய குடும்பத்தை காப்பது ஒவ்வொருவரின் கடமை.இதனால், 'மாஸ்டர் மைண்ட் பவுண்டேஷன்' என்ற அரசு சாரா தொண்டு நிறுவனம், உயிரிழந்த ராணுவ வீரர்களின் குழந்தைகளின் கல்விக்காக உதவி தொகை வழங்கவும், புதிய தொழில் பயிற்சிக்கு உதவவும், 'புராஜெக்ட் சகாயத்தா' என்ற திட்டத்தை அறிவித்துள்ளது.
இந்த உதவி வேண்டுவோர், லெப்டினன்ட் கர்னல் தியாகராஜனை, 99628 26333 என்ற மொபைல் போன் எண் மற்றும் 'www.mastermindfoundation.com' என்ற இணையதளத்தில் தொடர்பு கொள்ளலாம். இந்த தொண்டுக்கு வலிமை சேர்க்க உதவ முன்வருவோரும் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
18-நவ-202107:10:54 IST Report Abuse
Loganathan Kuttuva தொழிற் பயிற்சி மூலம் அவர்களின் வருமானம் அதிகரிக்கும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X