திருபுவனம் வைகை ஆற்றில் பக்தர்களுக்கு அடிப்படை வசதி தேவை

Added : நவ 18, 2021
Share
Advertisement
காசிக்கு அடுத்து அதிக புண்ணியம் தரும் ஸ்தலம் திருப்புவனம் வைகை ஆறு. தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திதி, தர்ப்பணம் கொடுக்க வருகின்றனர். அமாவாசையில் பல மடங்கு வருகை இருக்கும். தர்ப்பணம் கொடுப்போர் ஆற்றில் நீராடி புஷ்பவனேஸ்வரரை வணங்கி செல்கின்றனர். பிரசித்தி பெற்ற இங்கு பக்தர்களுக்கென குடிநீர், கழிப்பிட வசதி, பெண்கள் உடைமாற்றும் அறை, பொருட்கள் பாதுகாப்பு

காசிக்கு அடுத்து அதிக புண்ணியம் தரும் ஸ்தலம் திருப்புவனம் வைகை ஆறு. தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திதி, தர்ப்பணம் கொடுக்க வருகின்றனர்.

அமாவாசையில் பல மடங்கு வருகை இருக்கும். தர்ப்பணம் கொடுப்போர் ஆற்றில் நீராடி புஷ்பவனேஸ்வரரை வணங்கி செல்கின்றனர். பிரசித்தி பெற்ற இங்கு பக்தர்களுக்கென குடிநீர், கழிப்பிட வசதி, பெண்கள் உடைமாற்றும் அறை, பொருட்கள் பாதுகாப்பு அறை இல்லை. இதனால் கடும் சிரமத்திற்கு இடையே முன்னோர்களுக்கு பக்தர்கள் தர்ப்பணம் செலுத்தி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இங்கு அடிப்படை வசதிகளை செய்துதர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.லிங்கேஸ்வரி, மதுரை: திதி, தர்ப்பணம் கொடுப்போர் ஆற்றில் நீராடிய பின் உடை மாற்ற பாதுகாப்பான அறைகள் இல்லை. ஆற்றை ஒட்டியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அறைகள் கட்டலாம். மேலும் ஆற்றில் நீராடுவோர் உடைகளை அப்படியே ஆற்றிற்குள் விடுவதால் அவை தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. குப்பைகளை அள்ளுவதே இல்லை என்றார்.திருப்புவனம், நவ.18--திருப்புவனம் வைகை ஆற்றில் திதி, தர்ப்பணம் கொடுக்க வரும் பக்தர்கள் போதிய வசதியின்றி சிரமத்திற்குள்ளாகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X