சம்பவம் செய்தி

தமிழ்நாடு

உரத்தட்டுப்பாடு:மறவமங்கலத்தில் மறியல்: தாசில்தார், துணை பதிவாளர் விசாரணை

Added : நவ 18, 2021
Share
Advertisement
காளையார்கோவில்--மறவமங்கலம் தொடக்க கூட்டுறவு கடன் சங்கத்தில் உரம் வழங்காததை கண்டித்து விவசாயிகள் அலுவலகத்தை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர்.இச்சங்கத்தின் கீழ் மறவமங்கலம், சேதாம்பால், முடிக்கரை, சிரமம், நல்லேந்தல் உள்ளிட்ட கிராம ஊராட்சிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் உரம் பெற்று வருகின்றனர். தற்போது நடவு செய்த நெல்லுக்கு யூரியா உரம் தேவைப்படுவதால் தொடக்க

காளையார்கோவில்--மறவமங்கலம் தொடக்க கூட்டுறவு கடன் சங்கத்தில் உரம் வழங்காததை கண்டித்து விவசாயிகள் அலுவலகத்தை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர்.இச்சங்கத்தின் கீழ் மறவமங்கலம், சேதாம்பால், முடிக்கரை, சிரமம், நல்லேந்தல் உள்ளிட்ட கிராம ஊராட்சிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் உரம் பெற்று வருகின்றனர். தற்போது நடவு செய்த நெல்லுக்கு யூரியா உரம் தேவைப்படுவதால் தொடக்க கூட்டுறவு கடன் சங்கத்தை விவசாயிகள் நாடி வருகின்றனர். ஆனால் சிவகங்கை மாவட்டத்தில் உரத்தட்டுப்பாடு அதிகரிப்பால் கூட்டுறவு சங்கங்களில் உரம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருக்கும் உரத்தை பிரச்னையின்றி வழங்க டோக்கன் வழங்கி அதன்படி உரம் தரப்படுகிறது.தாசில்தாரின் சமரச பேச்சுஇந்நிலையில் நேற்று முன்தினம் டோக்கன் பெற்றவர்களுக்கு நேற்று உரம் வழங்கப்படும் என்றனர். ஆனால் நேற்று உரம் வழங்காமல் சங்கம் பூட்டி கிடந்தது. சங்க செயலரை அலைபேசியில் தொடர்பு கொண்ட விவசாயிகளுக்கு பதில் இல்லை. அதிருப்தியானவர்கள் மதியம் 2 மணி நேரம் மறியலில் ஈடுபட்டனர். தாசில்தார் பாலகிருஷ்ணன், கூட்டுறவு துணை பதிவாளர் வெங்கடலட்சுமி பேச்சு வார்த்தை நடத்தியதும் மறியலை கைவிட்டனர்.போதிய உரம் வரும்கூட்டுறவு இணை பதிவாளர் ஜினு கூறியதாவது, நேற்று முன்தினம் உரம் வாங்க வந்தவர்கள் கற்களை வீசியதால் அலுவலக கண்ணாடி சேதமுற்றது. சங்க செயலர் மாணிக்கவாசகத்திற்கும் காயம் ஏற்பட்டுள்ளது. அந்த பயத்தில் போலீஸ் பாதுகாப்புடன் அலுவலகத்தை திறக்க முடிவு செய்திருந்தார். அதற்குள் விவசாயிகள் மறியல் செய்துவிட்டனர். இதனால் சங்கத்தில் இருப்பில் இருந்த மூடைகள் வழங்கி, தேவையான உரம் வந்ததும் தரப்படும் என தெரிவித்துள்ளோம் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X