அரசியல் செய்தி

தமிழ்நாடு

'ஜெய்பீம்' படத்தில் குறிப்பிட்ட காவல் அதிகாரி கதாபாத்திரத்தின் பெயரை மாற்றியது ஏன்:நடிகர் சூர்யாவிற்கு பா.ஜ., கேள்வி

Added : நவ 18, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
மதுரை:''ஜெய்பீம் படத்தில் கொலையுண்ட ராஜாக்கண்ணு முதல் விசாரணை அதிகாரி வரை உண்மை நிகழ்வின் நிஜப்பெயரை கதாபாத்திரத்திற்கு சூட்டி விட்டு, ஒரு குறிப்பிட்ட காவல் அதிகாரி சிறுபான்மையினர் என்பதால் அந்த கதாபாத்திரத்திற்கு மட்டும் உண்மைக்கு மாறாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது ஏன்,'' என நடிகர் சூர்யாவிற்கு பா.ஜ., விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ் கேள்வி

மதுரை:''ஜெய்பீம் படத்தில் கொலையுண்ட ராஜாக்கண்ணு முதல் விசாரணை அதிகாரி வரை உண்மை நிகழ்வின் நிஜப்பெயரை கதாபாத்திரத்திற்கு சூட்டி விட்டு, ஒரு குறிப்பிட்ட காவல் அதிகாரி சிறுபான்மையினர் என்பதால் அந்த கதாபாத்திரத்திற்கு மட்டும் உண்மைக்கு மாறாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது ஏன்,'' என நடிகர் சூர்யாவிற்கு பா.ஜ., விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது: ஜெய்பீம் படத்தில் காவல் துறையால் பாதிக்கப்பட்ட ஒரு பழங்குடி குடும்பத்தின் துயரத்தை நேர்த்தியாக வெளிப்படுத்தியுள்ளனர். 1995ல் விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த உண்மை சம்பவத்தை பின்னணியாக கொண்டு எடுக்கப்பட்ட படத்தில் அக்காலகட்டத்தில் ரோட்டில் ஓடிய வாகனப்பதிவு எண் முதல் சாலையோர சுவர்களில் ஒட்டிய திரைப்பட போஸ்டர் என விசாரணை அதிகாரி விசாரணை துவக்க காலம் முதல் முடியும் காலம் என நாள் காட்டும் நாட்காட்டியின் மூலம் காட்டியுள்ளனர்.

ஆனால் ஒரு குறிப்பிட்ட காவல் அதிகாரி சிறுபான்மையினர் என்பதால் அக் கதாபாத்திரத்திற்கு மட்டும் உண்மைக்கு மாறாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது ஏன். பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி ஆதங்கத்தில் உண்மை இருக்கிறது. சமீப காலமாக உங்கள் (சூர்யா) குடும்பத்தினர் சிலர் தமிழக கலாசாரம், பண்பாடு, வழிபாட்டை சித்தரிக்கும் விதம் பெரும்பான்மை மக்களுக்கு ஏற்புடையதாக இல்லை.
ஜெய்பீம் படத்தில் எதிர்மறையாக சித்தரிக்கப்பட்ட காவல் அதிகாரியின் பின்புறத்திலுள்ள நாட்காட்டியில் இடம் பெற்றுள்ளபடமும், வழக்காடு மன்றத்தில் ஒரு கதாபாத்திரம் அடிக்கடி உச்சரிக்கும் ஒருசமயம் சார்ந்த சொல்லும், அவர்களை எதிர்மறை சக்தியாக காட்ட திட்டமிட்டு புகுத்தப்பட்டுள்ளது.
படைப்பு சுதந்திரம் பெயரில் பெரும்பான்மை மக்களின் கலாசாரம், பண்பாட்டை குறி வைத்து தாக்குவதும், அவர்கள் எதிர்மறையாக சித்திரிக்கப்படுவதும் திரைபடங்களில் தொடர்ந்து கொண்டுள்ளது.அன்புமணியின் கேள்விக்கு சூர்யா அளித்த பதில் ஏற்புடையதல்ல என கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raman - kottambatti,இந்தியா
18-நவ-202105:50:56 IST Report Abuse
Raman இந்த விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ் இதுவரை விவசாயிகளுக்கு ஆற்றிய தொண்டு எத்தனை ? ஹா ஹா ஹா ஹா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X