பொது செய்தி

தமிழ்நாடு

கொடைக்கானல் பகுதியில் 3 மணி நேரம் கொட்டிய கனமழை

Added : நவ 18, 2021
Share
Advertisement
கொடைக்கானல்--கொடைக்கானல் சுற்று வட்டாரப் பகுதியில் நேற்று 3 மணி நேரம் கன மழை கொட்டித் தீர்த்தது.வெப்பச்சலனம் மற்றும் வடகிழக்கு பருவமழையின் போது நல்ல மழை பெய்தது. சில தினங்கள் மழை ஓய்ந்திருந்த சூழலில் நகர் பகுதியில் அடர் பனிமூட்டம் நிலவி சாரல் நீடித்தது. நேற்று மதியம் 1:00 மணிக்கு தொடங்கிய மழை மாலை வரை கனமழையாக பெய்தது. தரையிறங்கிய மேகக் கூட்டத்தால் ரம்யமான சூழல்
 கொடைக்கானல் பகுதியில்  3 மணி நேரம் கொட்டிய கனமழை

கொடைக்கானல்--கொடைக்கானல் சுற்று வட்டாரப் பகுதியில் நேற்று 3 மணி நேரம் கன மழை கொட்டித் தீர்த்தது.வெப்பச்சலனம் மற்றும் வடகிழக்கு பருவமழையின் போது நல்ல மழை பெய்தது. சில தினங்கள் மழை ஓய்ந்திருந்த சூழலில் நகர் பகுதியில் அடர் பனிமூட்டம் நிலவி சாரல் நீடித்தது. நேற்று மதியம் 1:00 மணிக்கு தொடங்கிய மழை மாலை வரை கனமழையாக பெய்தது. தரையிறங்கிய மேகக் கூட்டத்தால் ரம்யமான சூழல் நிலவியது.காற்றில் ஈரப்பதம் அதிகரித்து கடுங்குளிர் நிலவியதால் குளிரைத் தாங்கும் ஆயத்த ஆடைகளுடனே பயணிகள் , பொதுமக்கள் நடமாடினர். பயணிகள் கூட்டம் குறைந்திருந்தாலும், ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். நீர்பிடிப்பு பகுதி மழையால் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X