தொடர் மழையால் அழுகிய திராட்சை: நத்தம் விவசாயிகள் வேதனை

Added : நவ 18, 2021
Share
Advertisement
நத்தம்---நத்தம் அருகே தொடர் மழை காரணமாக அழுகிய திராட்சையை கால்நடைகளுக்கு கொட்டும் அவலம் ஏற்பட்டுள்ளது.நத்தம் அருகே பட்டணம்பட்டி பகுதியில் பல ஏக்கரில் பன்னீர் திராட்சை சாகுபடி நடக்கிறது. கடந்த காலங்களில் ஒரு கிலோ திராட்சை ரூ.80க்கு விற்றது. தற்போது ரூ.20 முதல் 30 வரை விற்கிறது. விலை அதிகரிக்கும் என அறுவடைக்கு காத்திருந்த விவசாயிகளுக்கு தொடர்மழை அதிர்ச்சியை

நத்தம்---நத்தம் அருகே தொடர் மழை காரணமாக அழுகிய திராட்சையை கால்நடைகளுக்கு கொட்டும் அவலம் ஏற்பட்டுள்ளது.

நத்தம் அருகே பட்டணம்பட்டி பகுதியில் பல ஏக்கரில் பன்னீர் திராட்சை சாகுபடி நடக்கிறது. கடந்த காலங்களில் ஒரு கிலோ திராட்சை ரூ.80க்கு விற்றது. தற்போது ரூ.20 முதல் 30 வரை விற்கிறது. விலை அதிகரிக்கும் என அறுவடைக்கு காத்திருந்த விவசாயிகளுக்கு தொடர்மழை அதிர்ச்சியை கொடுத்துள்ளது.மழையின் காரணமாக பழங்கள் வெடித்து அழுகி விழுகின்றன. இதனால் விவசாயிகள் கடும் பாதிப்படைந்துள்ளனர். சிறு, குறு விவசாயி களுக்கு திராட்சை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நல்ல மகசூல் கொடுக்கும். ஆனால் அழுகிவிட்டதால் அவற்றை மாடுகளுக்கு அளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.திராட்சை விவசாயி சதீஷ்குமார்- கூறியதாவது: கூட்டுறவு வங்கிகளில் நகைகளை அடமானம் வைத்து சாகுபடி செய்தேன். கடன் பெற்று உரம், பூச்சி மருந்து தெளித்து வளர்த்த பழங்கள் அழிவுக்கு உள்ளாகும் போது கண்ணீர் வருகிறது. அறுவடை செய்யும் பழங்களை மதுரை, திண்டுக்கல், திருச்சி மொத்த மார்க்கெட்டில் கிலோ ரூ.10 என விலை போகிறது. எங்களுக்கு இழப்பீடு அல்லது கூட்டுறவு கடன் தள்ளுபடி அளிக்க வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X