கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கோயில் சொத்துக்களை தணிக்கை செய்ய வழக்கு: அறிக்கை கோரும் உயர்நீதிமன்றம்

Added : நவ 18, 2021
Share
Advertisement
மதுரை:கோயில்களின் சொத்துக்களை வெளித்தணிக்கைக்கு உட்படுத்த தாக்கலான வழக்கில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.கோவை ஈஷா யோகா மையம் ஜெகதீஷ் வாசுதேவ் சார்பில் ராஜபாளையத்தைச் சேர்ந்த பவர் ஏஜன்ட் தினேஷ் ராஜா தாக்கல் செய்த பொதுநல மனு:மதம் சார்ந்த விவகாரங்களில் அரசு தலையிட முடியாது. தமிழக அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள

மதுரை:கோயில்களின் சொத்துக்களை வெளித்தணிக்கைக்கு உட்படுத்த தாக்கலான வழக்கில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
கோவை ஈஷா யோகா மையம் ஜெகதீஷ் வாசுதேவ் சார்பில் ராஜபாளையத்தைச் சேர்ந்த பவர் ஏஜன்ட் தினேஷ் ராஜா தாக்கல் செய்த பொதுநல மனு:மதம் சார்ந்த விவகாரங்களில் அரசு தலையிட முடியாது. தமிழக அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களுக்குச் சொந்தமாக நிலம், அசையும், அசையா சொத்துக்கள் உள்ளன. அவை யார், யார் வசம் உள்ளன, தற்போதைய நிலை, அவற்றின் மூலம் கிடைக்கும் வாடகை மற்றும் நிலுவை, பக்தர்களிடமிருந்து காணிக்கையாக பெறும் தொகை, வரவு-செலவுகளை வெளித் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும்.
இதன் மூலம் நிதியை கையாள்வதில் தவறுகளை வெளிக்கொணர முடியும். கோயில் சொத்துக்கள், ஆண்டு வருவாய் விபரங்களை வெளியிட வேண்டும். நிபுணர்கள், சான்றோர்கள், நீதித்துறையைச் சேர்ந்தவர்கள் அடங்கிய கமிஷன் அமைக்க வேண்டும். கோயில் நிர்வாகம், சடங்கு சம்பிரதாயங்களை முறையாக கடைபிடிக்க வழிவகை செய்ய வேண்டும். கோயில் நிர்வாகப் பொறுப்பை சமூகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மனு அனுப்பினோம். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு தினேஷ்ராஜா குறிப்பிட்டார்.
நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, பி.வேல்முருகன் அமர்வு தமிழக தலைமைச் செயலாளர், அறநிலையத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தற்போதைய நிலை குறித்து டிச.,15 ல் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X