பொது செய்தி

தமிழ்நாடு

குறுந்தகவல் அனுப்பி பண மோசடி: பொதுமக்களே எச்சரிக்கை

Added : நவ 18, 2021
Share
Advertisement
திண்டுக்கல்,- -'வங்கி ஏ.டி.எம்.,களில் பணம் எடுத்தால் வரும் குறுஞ்செய்தி போல அலைபேசிகளுக்கு அனுப்பி மோசடி கும்பல்கள் கைவரிசை காட்டுவதால்' பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என, திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்திஉள்ளனர்.தற்போது எல்லாம் இணையமாகி விட்டதால், போலி வங்கி இணையம், பரிசு கூப்பன், ஆன்லைன் விற்பனை என மோசடிகள் நடக்கும் நிலையில் தற்போது

திண்டுக்கல்,- -'வங்கி ஏ.டி.எம்.,களில் பணம் எடுத்தால் வரும் குறுஞ்செய்தி போல அலைபேசிகளுக்கு அனுப்பி மோசடி கும்பல்கள் கைவரிசை காட்டுவதால்' பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என, திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்திஉள்ளனர்.தற்போது எல்லாம் இணையமாகி விட்டதால், போலி வங்கி இணையம், பரிசு கூப்பன், ஆன்லைன் விற்பனை என மோசடிகள் நடக்கும் நிலையில் தற்போது புதிதாக குறுஞ்செய்தி வாயிலாக மோசடி நடக்க துவங்கியுள்ளது. ஏ.டி.எம்.,களில் பணம் எடுத்ததும், எடுத்த தொகை, மீதமுள்ள தொகை, எந்த ஏ.டி.எம்., என்ற விவரம் குறுஞ்செய்தியாக சம்பந்தப்பட்டவரின் அலைபேசிக்கு வரும். தற்போது இதேபோல 'டெபிட்' குறுஞ்செய்தியை பொதுமக்கள் நம்பும் வகையில் வங்கியிலிருந்து அனுப்புவது போன்றே மோசடி நபர்களும் அனுப்புகின்றனர்.இதைப் பார்ப்பவர், பணம் எடுக்கவே இல்லையே என்ற எண்ணுவார். உடனே அதே செய்தியில் உதவிக்கு என ஒரு எண் தரப்பட்டு இருக்கும். அதனை நம்பி அழைக்கும் நபர்களிடம் பேசும் மோசடி கும்பல், 'உங்கள் கணக்கை சரிபார்க்கிறோம் எனக் கூறி வங்கி தகவல்களை பெற்று அழைப்பை துண்டித்து விடுகின்றனர். சிறிது நேரத்தில் உண்மையாகவே பணம் பறிபோன குறுஞ்செய்தி வரும்போதுதான் ஏமாற்றப்பட்டது தெரிய வரும். எனவே, பொதுமக்கள் எது நடந்தாலும், வங்கியை தொடர்பு கொள்வதே நல்லது என போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X