பொது செய்தி

தமிழ்நாடு

சிறுவியாபாரிகளுக்கு நலவாரியம்

Added : நவ 18, 2021
Share
Advertisement
திண்டுக்கல்-திண்டுக்கல்லில் அமைப்புசாரா தெருவோர சுமை சிறுவியாபாரிகள் முன்னேற்ற தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.மாவட்ட பொறுப்பாளர் வினோத்குமார் தலைமை வகித்தார். துணை பொறுப்பாளர்கள் நியூட்டன், செந்தில் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாநில துணைத் தலைவர் மாடசாமி வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் மாரியப்பன் தீர்மானங்களை அறிவித்தார். மாநிலத் தலைவர்

திண்டுக்கல்-திண்டுக்கல்லில் அமைப்புசாரா தெருவோர சுமை சிறுவியாபாரிகள் முன்னேற்ற தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.மாவட்ட பொறுப்பாளர் வினோத்குமார் தலைமை வகித்தார். துணை பொறுப்பாளர்கள் நியூட்டன், செந்தில் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாநில துணைத் தலைவர் மாடசாமி வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் மாரியப்பன் தீர்மானங்களை அறிவித்தார். மாநிலத் தலைவர் ராசா முருகேசன் பேசினார்.'சாலையோர, தெருச்சுமை, சிறு வியாபாரிகளை ஒருங்கிணைத்து 'சிறுவியாபாரிகள் நலவாரியம்' அமைக்க வேண்டும். மழை வெள்ளத்தால் வியாபாரம் செய்ய முடியாமல் வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். நகர்ப்புறம், ஊரக உள்ளாட்சி மற்றும் அறநிலையத்துறை கடைகளை சிறு வியாபாரிகளுக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் நிபந்தனை தளர்த்தி கூடுதலாக கடனுதவி வழங்க வேண்டும்' என தீர்மானம் நிறைவேற்றினர். இளைஞர் அணி தலைவர் ஞானசம்பந்தம் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X