பொது செய்தி

தமிழ்நாடு

வருவாய்த்துறையினருக்கு இடர்படி வழங்கப்படுமா அரசுக்கு வி.ஏ.ஓ.,க்கள் வலியுறுத்தல்

Added : நவ 18, 2021
Share
Advertisement
மதுரை:''தொடர் மழை, பேரிடர் காலங்களில் சிறப்பாக பணிபுரியும் வருவாய்த்துறையினருக்கு ஊக்குமளிக்கும் வகையில் இடர்படியை (ரிஸ்க் அலவன்ஸ்) மாநில அரசு வழங்க வேண்டும்,'' என, மதுரையில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க மாநில தலைவர் ராஜன்சேதுபதி தெரிவித்தார்.அவர் கூறியதாவது: அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கை மற்றும் தேர்தலில் அளித்த வாக்குறுதியின்படி புதிய

மதுரை:''தொடர் மழை, பேரிடர் காலங்களில் சிறப்பாக பணிபுரியும் வருவாய்த்துறையினருக்கு ஊக்குமளிக்கும் வகையில் இடர்படியை (ரிஸ்க் அலவன்ஸ்) மாநில அரசு வழங்க வேண்டும்,'' என, மதுரையில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க மாநில தலைவர் ராஜன்சேதுபதி தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கை மற்றும் தேர்தலில் அளித்த வாக்குறுதியின்படி புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வர முதல்வர் உத்தரவிட வேண்டும்.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கிராம நிர்வாக அலுவலகக் கட்டடங்கள் போதிய பராமரிப்பின்றி புதுப்பிக்கப்படாமல் படுமோசமான நிலையில் உள்ளன. மழை காலமாக இருப்பதால் அவற்றை உடனடியாக சீரமைக்க அரசு உத்தரவிட வேண்டும். அலுவலகம் இல்லாத கிராமங்களில் உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து வி.ஏ.ஓ., அலுவலகம் கட்டிட வேண்டும்.
கடந்த ஆட்சியில் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து துறையினரின் போராட்ட காலங்களையும் பணிக்காலமாக அங்கீகரித்து மாநில அரசு உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் வி.ஏ.ஓ.,க்களின் 19 நாள் போராட்ட காலத்தை மட்டும் பணிக்காலமாக அங்கீரித்து அரசு உத்தரவு வெளியிடப்படாதது ஏமாற்றமளிக்கிறது. இதுகுறித்து முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X