பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை ஐ.ஐ.டி.,யில் 20ல் பட்டமளிப்பு விழா

Added : நவ 18, 2021
Share
Advertisement
சென்னை:சென்னை ஐ.ஐ.டி.,யின் 58வது பட்டமளிப்பு விழா, வரும் 20ம் தேதி நடக்கிறது. இதில் பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.நாட்டின் உயர்ந்த தொழில்நுட்ப கல்வி நிறுவனமான சென்னை ஐ.ஐ.டி.,யில், 8,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். சென்னை கிண்டியில் செயல்படும் இந்த நிறுவனத்தில், ஆண்டுதோறும் பி.டெக்., - எம்.டெக்., - எம்.எஸ்., - பிஎச்.டி., உள்ளிட்ட
 சென்னை ஐ.ஐ.டி.,யில்  20ல் பட்டமளிப்பு விழா

சென்னை:சென்னை ஐ.ஐ.டி.,யின் 58வது பட்டமளிப்பு விழா, வரும் 20ம் தேதி நடக்கிறது. இதில் பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

நாட்டின் உயர்ந்த தொழில்நுட்ப கல்வி நிறுவனமான சென்னை ஐ.ஐ.டி.,யில், 8,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். சென்னை கிண்டியில் செயல்படும் இந்த நிறுவனத்தில், ஆண்டுதோறும் பி.டெக்., - எம்.டெக்., - எம்.எஸ்., - பிஎச்.டி., உள்ளிட்ட படிப்புகளை முடிக்கும் மாணவர்களுக்கு, பட்டமளிப்பு விழா நடத்தப்படும்.இதில், 2,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டம் பெறுவர்.

இந்த ஆண்டு 58 வது பட்டமளிப்பு விழா, 20ம் தேதி ஐ.ஐ.டி., வளாகத்தில் நடக்கிறது. அதில், பேட்மின்டன் வீராங்கனையான பி.வி.சிந்து பங்கேற்று, பட்டமளிப்பு விழா பேருரையாற்றுகிறார். இவர் தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாதை பூர்வீகமாக கொண்டவர். இவர் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதால், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

ஏனெனில், சென்னை ஐ.ஐ.டி.,யில் படிக்கும் மாணவர்களில் பெரும்பாலானவர்கள் ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்கள். அவர்கள், 'எங்கள் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல வீராங்கனை, தங்கள் கல்லுாரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பது சிறப்பு' என, ஆன்லைனில், தங்கள் மகிழ்ச்சியை பதிவு செய்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X