சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சுவரில் சிறுநீர் சந்தானம் மீது போலீசில் புகார்

Added : நவ 18, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:சபாபதி படத்தில், சுவரில் சிறுநீர் கழிப்பது போன்ற காட்சி உள்ளதற்கு, நடிகர் சந்தானம் மீது நடவடிக்கை எடுக்க கோரி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.புகாரில் கூறியிருப்பதாவது:நடிகர் சந்தானம் நடித்து வெளிவர உள்ள சபாபதி படத்தின் விளம்பரம் வந்துஉள்ளது. அதில், நடிகர் சந்தானம், ஒரு சுவர் முன் சிறுநீர் கழிப்பது

சென்னை:சபாபதி படத்தில், சுவரில் சிறுநீர் கழிப்பது போன்ற காட்சி உள்ளதற்கு, நடிகர் சந்தானம் மீது நடவடிக்கை எடுக்க கோரி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

புகாரில் கூறியிருப்பதாவது:நடிகர் சந்தானம் நடித்து வெளிவர உள்ள சபாபதி படத்தின் விளம்பரம் வந்துஉள்ளது. அதில், நடிகர் சந்தானம், ஒரு சுவர் முன் சிறுநீர் கழிப்பது போலவும், அந்த சுவரில், 'தண்ணீர் திறந்து விடக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் திரண்டு வாரீர்' எனவும், எழுதப்பட்டுள்ளது.

இந்த பட விளம்பரம், தண்ணீர் விடக் கோரி நடைபெறும் போராட்டங்களை எள்ளி நகையாடுவது போல உள்ளது. மேலும், சுவரில் சிறுநீர் கழிப்பது போல வெளியிடப்பட்டிருப்பது, பொது இடங்களில் அநாகரிகமான முறையில் நோய் தொற்று பரப்பும் வகையில் உள்ளது.
சந்தானம் போன்றவர்கள், இது போன்றவற்றை காட்சிப்படுத்துவது மக்களையும் ஈடுபட ஊக்குவிப்பதாக அமையும். எனவே, சந்தானம், பட இயக்குனர் சீனிவாசராவ் உள்ளிட்டவர்கள் மீது, இந்திய தண்டனை சட்ட பிரிவுப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
18-நவ-202106:09:13 IST Report Abuse
Mani . V என்ன சட்ட நடவடிக்கை? பேசாமல் "கட்" பண்ணி விட வேண்டியதுதானே? இவரின் படம் எல்லாம் கிட்டத்தட்ட நீலப்படம் போன்றுதான் உள்ளது. அவ்வளவும் ஆபாச வசனங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X