பொது செய்தி

இந்தியா

அதிநவீன 'பாட் ஓட்டல்' வசதி மும்பை ரயில் நிலையத்தில் திறப்பு

Updated : நவ 18, 2021 | Added : நவ 18, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
மும்பை-மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் முதல்முறையாக, அதிநவீன வசதிகளுடன் கூடிய, 'பாட் ஓட்டல்' எனப்படும் சிறிய ஓய்வு அறைகளை மத்திய அமைச்சர் நேற்று திறந்து வைத்தார்.ரயில் பயணியர் சில மணி நேரம் தங்கி ஓய்வெடுத்து செல்வதற்காக, 'பாட்' அல்லது 'கேப்ஸ்யூல்' என்றழைக்கப்படும் ஓட்டல் உலகம் முழுதும் பல்வேறு நாட்டு ரயில் நிலையங்களில் உள்ளன. கிழக்காசிய நாடான

மும்பை-மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் முதல்முறையாக, அதிநவீன வசதிகளுடன் கூடிய, 'பாட் ஓட்டல்' எனப்படும் சிறிய ஓய்வு அறைகளை மத்திய அமைச்சர் நேற்று திறந்து வைத்தார்.



latest tamil news


ரயில் பயணியர் சில மணி நேரம் தங்கி ஓய்வெடுத்து செல்வதற்காக, 'பாட்' அல்லது 'கேப்ஸ்யூல்' என்றழைக்கப்படும் ஓட்டல் உலகம் முழுதும் பல்வேறு நாட்டு ரயில் நிலையங்களில் உள்ளன. கிழக்காசிய நாடான ஜப்பானில் தான், 'பாட் ஓட்டல்' முதன்முதலில் அறிமுகமானது.ரயில் நிலைய வளாகத்துக்கு உள்ளேயே ஒரு நபர் மட்டும் வசதியாக படுத்து ஓய்வெடுக்க கூடிய சிறிய, 'கேப்ஸ்யூல்' வடிவிலான அறைகளே, 'பாட் ஓட்டல்' என்றழைக்கப்படுகின்றன.


latest tamil news


நம் நாட்டில் முதல்முறையாக, மஹாராஷ்டிராவின் மும்பையில் உள்ள சென்ட்ரல் ரயில் நிலையத்தில், 'பாட் ஓட்டல்' நேற்று திறக்கப்பட்டது.ரயில்வே இணை அமைச்சர் ராவ்சாஹேப் தான்வே, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஓட்டலை திறந்து வைத்தார்.இந்த பாட் ஓட்டலில் மொத்தம் 48 அறைகள் உள்ளன.அதில் குளிர்சாதன வசதி, 'டிவி', சொகுசான படுக்கைகள், 'வை - பை' இணைய சேவை, 'மொபைல் போன் சார்ஜர்', சிறிய பாதுகாப்பு பெட்டகம், புத்தகம் படிக்கும் விளக்கு ஆகியவை உள்ளன. இங்கு தங்குபவர்களுக்கு பொதுவான கழிப்பிடம் மற்றும் குளியலறை வசதி தரப்படுகிறது. 12 மணி நேரம் தங்குவதற்கு, 999 ரூபாயும்; 24 மணி நேரத்திற்கு, 1,999 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
18-நவ-202108:49:52 IST Report Abuse
Lion Drsekar இந்த அறையை பெறுவதற்கு அரசியல் பிரமுகர்களின் சிபாரிசு இல்லாமல் கிடைக்காது என்றும் செய்தி வெளியிட்டிருந்தால் நன்றாக இருக்கும், பயணிகள் படிக்கட்டில் தொங்குவதுபோல்தான் அவர்களுக்கு அளிக்கப்படும் வசதிகளும், இந்த செய்தியைப் பாராட்டலாம் என்றால் உண்மையான பயணிகளுக்கு இவர்கள் நேர்மையாக கொடுத்தால் பாராட்டலாம், வந்தே மாதரம்
Rate this:
Cancel
amuthan - kanyakumari,இந்தியா
18-நவ-202106:09:22 IST Report Abuse
amuthan நல்லா தான் இருக்கு. பல ஆண்டுகளுக்கு முன்பு இது போன்று ஹனிமூன் ரெயில் பெட்டிகள் தொடங்கப் பட்டது. பின்னர் அதில் விபச்சாரம் அதிகமாக நடப்பதாக கூறி நிறுத்தப்பட்டதை நினைவு கூறுகிறேன்
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
18-நவ-202104:41:57 IST Report Abuse
Natarajan Ramanathan இதே மும்பை ரயில் நிலையத்தில் 1989ல் மிகப்பெரிய அறையில் நூறு ரூபாய் வாடகையில் இரண்டு நாட்கள் தங்கி மும்பையை சுற்றிப்பார்த்தேன்.
Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
18-நவ-202107:36:46 IST Report Abuse
Sanny உண்மைதான் நண்பரே. ஆனால் 1989 இல் தங்கம் என்ன விலை, இன்று என்ன விலை என்று கணக்கு பார்த்தல், அப்போ கொடுத்ததுக்கும், இப்போ கொடுப்பதும் ஒன்னாக இருக்கும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X