அதிநவீன பாட் ஓட்டல் வசதி மும்பை ரயில் நிலையத்தில் திறப்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

அதிநவீன 'பாட் ஓட்டல்' வசதி மும்பை ரயில் நிலையத்தில் திறப்பு

Updated : நவ 18, 2021 | Added : நவ 18, 2021 | கருத்துகள் (4)
Share
மும்பை-மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் முதல்முறையாக, அதிநவீன வசதிகளுடன் கூடிய, 'பாட் ஓட்டல்' எனப்படும் சிறிய ஓய்வு அறைகளை மத்திய அமைச்சர் நேற்று திறந்து வைத்தார்.ரயில் பயணியர் சில மணி நேரம் தங்கி ஓய்வெடுத்து செல்வதற்காக, 'பாட்' அல்லது 'கேப்ஸ்யூல்' என்றழைக்கப்படும் ஓட்டல் உலகம் முழுதும் பல்வேறு நாட்டு ரயில் நிலையங்களில் உள்ளன. கிழக்காசிய நாடான

மும்பை-மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் முதல்முறையாக, அதிநவீன வசதிகளுடன் கூடிய, 'பாட் ஓட்டல்' எனப்படும் சிறிய ஓய்வு அறைகளை மத்திய அமைச்சர் நேற்று திறந்து வைத்தார்.



latest tamil news


ரயில் பயணியர் சில மணி நேரம் தங்கி ஓய்வெடுத்து செல்வதற்காக, 'பாட்' அல்லது 'கேப்ஸ்யூல்' என்றழைக்கப்படும் ஓட்டல் உலகம் முழுதும் பல்வேறு நாட்டு ரயில் நிலையங்களில் உள்ளன. கிழக்காசிய நாடான ஜப்பானில் தான், 'பாட் ஓட்டல்' முதன்முதலில் அறிமுகமானது.ரயில் நிலைய வளாகத்துக்கு உள்ளேயே ஒரு நபர் மட்டும் வசதியாக படுத்து ஓய்வெடுக்க கூடிய சிறிய, 'கேப்ஸ்யூல்' வடிவிலான அறைகளே, 'பாட் ஓட்டல்' என்றழைக்கப்படுகின்றன.


latest tamil news


நம் நாட்டில் முதல்முறையாக, மஹாராஷ்டிராவின் மும்பையில் உள்ள சென்ட்ரல் ரயில் நிலையத்தில், 'பாட் ஓட்டல்' நேற்று திறக்கப்பட்டது.ரயில்வே இணை அமைச்சர் ராவ்சாஹேப் தான்வே, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஓட்டலை திறந்து வைத்தார்.இந்த பாட் ஓட்டலில் மொத்தம் 48 அறைகள் உள்ளன.அதில் குளிர்சாதன வசதி, 'டிவி', சொகுசான படுக்கைகள், 'வை - பை' இணைய சேவை, 'மொபைல் போன் சார்ஜர்', சிறிய பாதுகாப்பு பெட்டகம், புத்தகம் படிக்கும் விளக்கு ஆகியவை உள்ளன. இங்கு தங்குபவர்களுக்கு பொதுவான கழிப்பிடம் மற்றும் குளியலறை வசதி தரப்படுகிறது. 12 மணி நேரம் தங்குவதற்கு, 999 ரூபாயும்; 24 மணி நேரத்திற்கு, 1,999 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X