இவ்வளவு மழை பெய்தும் நிரம்பாத 1,520 ஏரிகள்

Added : நவ 18, 2021 | கருத்துகள் (2) | |
Advertisement
சென்னை:-வடகிழக்கு பருவ மழை கொட்டி தீர்த்தும், ௧,520 ஏரிகள் நிரம்பாததால் நீர்வளத் துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.மாநிலம் முழுதும் நீர்வளத் துறையினர் பராமரிப்பில் 14 ஆயிரத்து 138 ஏரிகள் உள்ளன. அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில், 2,040 ஏரிகள்; சிவகங்கையில் 1,460; மதுரையில் 1,340; புதுக்கோட்டையில் 1,131; திருநெல்வேலியில் 781; திருவண்ணாமலையில் 697 ஏரிகள் உள்ளன. குறைந்தபட்சமாக

சென்னை:-வடகிழக்கு பருவ மழை கொட்டி தீர்த்தும், ௧,520 ஏரிகள் நிரம்பாததால் நீர்வளத் துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மாநிலம் முழுதும் நீர்வளத் துறையினர் பராமரிப்பில் 14 ஆயிரத்து 138 ஏரிகள் உள்ளன. அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில், 2,040 ஏரிகள்; சிவகங்கையில் 1,460; மதுரையில் 1,340; புதுக்கோட்டையில் 1,131; திருநெல்வேலியில் 781; திருவண்ணாமலையில் 697 ஏரிகள் உள்ளன.

குறைந்தபட்சமாக மயிலாடுதுறையில் இரண்டு; நாகப்பட்டினத்தில் மூன்று ஏரிகள் உள்ளன. வட கிழக்கு பருவ மழை துவங்கியது முதல், பல மாவட்டங்களில் உள்ள ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் 5,988 ஏரிகள் நிரம்பியுள்ளன.
இதுமட்டுமின்றி 3,099 ஏரிகள் நிரம்பும் கட்டத்திலும், 1,925 ஏரிகள் 75 சதவீதம் அளவிற்கும், 1,606 ஏரிகள் 50 சதவீதம் அளவிற்கும் நிரம்பியுள்ளன. ஆனால், 247 ஏரிகளில் ஒரு சொட்டு நீர் கூட இல்லை. இந்த பட்டியலில், தர்மபுரி மாவட்டத்தில் 57 ஏரிகளும், நாமக்கல்லில் 39, விருதுநகரில் 32, கிருஷ்ணகிரியில் 25, திண்டுக்கல்லில் 22 ஏரிகளும் உள்ளன. இதுமட்டுமின்றி 1,273 ஏரிகள் 25 சதவீதம் அளவிற்கு நிரம்பிஉள்ளன.

இந்த பட்டியலில், விருது நகரில் 201 ஏரிகளும், திருநெல்வேலியில் 189 ஏரிகளும், ராமநாதபுரத்தில் 186 ஏரிகளும், சிவகங்கையில் 154, மதுரையில் 116, கன்னியாகுமரியில் 71 ஏரிகளும் உள்ளன. கன்னியாகுமரியில் சில நாட்களுக்கு முன் கன மழை கொட்டி தீர்த்தது.இதனால், சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ளநீர் சூழ்ந்தது. இருந்தும், 71 ஏரிகளில் மொத்த கொள்ளளவில் 25 சதவீதம் அளவிற்கு மட்டுமே நீர் தேங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இம்மாவட்டங்களில் உள்ள அணைகள் நிரம்பி வழிகின்றன. ஆனால், ஏரிகள் நிரம்பவில்லை. இதனால், நீர்வளத் துறையினர் கடும் அதிர்ச்சி அடைந்துஉள்ளனர். ஆக்கிரமிப்புகள் மட்டுமின்றி, 10 ஆண்டுகளாக இந்த ஏரிகள் முறையாக பராமரிக்கப்படாததுமே, இதற்கு காரணம்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
John Miller - Hamilton,பெர்முடா
18-நவ-202120:28:23 IST Report Abuse
John Miller வருஷ வருஷம் அதிர்க்காரிகள் அத்தேர்ட்ஷி அடைவது சகஜம்.
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
18-நவ-202113:32:22 IST Report Abuse
Girija மதுரைக்கு அஞ்சா நெஞ்சன், திருவண்ணாமலைக்கு வேலு, என்று ஊருக்கு ஊர். அப்புறம் கடலே வந்தா கூட வத்தி போய்டும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X