5 மாணவர்கள் நீரில் மூழ்கி பலி| Dinamalar

5 மாணவர்கள் நீரில் மூழ்கி பலி

Added : நவ 18, 2021
Share
ஐதராபாத்:தெலுங்கானா மாநிலம் ராஜண்ணா ஸ்ரீசில்லா மாவட்டத்தில் மன்யார் நதி ஓடுகிறது. கனமழை காரணமாக நதியில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.இந்நிலையில், அப்பகுதி பள்ளி மாணவர்கள் 8 பேர் குளிப்பதற்காக தடுப்பணைக்கு சென்றனர்.6 பேர் குளித்துக் கொண்டிருந்தனர். 2 பேர் கரையில் அமர்ந்திருந்துள்ளனர். நீச்சல் தெரியாத 6 மாணவர்களும் நீரில் மூழ்கினர். தீயணைப்பு துறையினர் கோலிபாக கணேஷ்

ஐதராபாத்:தெலுங்கானா மாநிலம் ராஜண்ணா ஸ்ரீசில்லா மாவட்டத்தில் மன்யார் நதி ஓடுகிறது. கனமழை காரணமாக நதியில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

இந்நிலையில், அப்பகுதி பள்ளி மாணவர்கள் 8 பேர் குளிப்பதற்காக தடுப்பணைக்கு சென்றனர்.6 பேர் குளித்துக் கொண்டிருந்தனர். 2 பேர் கரையில் அமர்ந்திருந்துள்ளனர். நீச்சல் தெரியாத 6 மாணவர்களும் நீரில் மூழ்கினர். தீயணைப்பு துறையினர் கோலிபாக கணேஷ் 15, தீகல அஜய் 14, கொங்கா ராகேஷ் 15, ஜடலா வெங்கட சாய் 14, ஸ்ரீராம் கிராந்தி குமார் 14, ஆகியோரை சடலமாக மீட்டனர்.

மாயமான ஒரு மாணவனை தேடி வருகின்றனர்.தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை மந்திரி கே.டி. ராமராவ் சிர்சில்லா குழந்தைகளை இழந்து வாடும் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து உள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X