கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தீர்ப்பாயத்தில் காலியிடம் அறிக்கை அளிக்க உத்தரவு

Added : நவ 18, 2021
Share
Advertisement
சென்னை:தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் உள்ள காலியிடங்களை நிரப்பியது தொடர்பாக, மத்திய அரசு அறிக்கை அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னையைச் சேர்ந்த, பட்டய கணக்காளரான வெங்கட் சிவகுமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'சென்னையில் உள்ள தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தின், இரு அமர்வுகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப வேண்டும்; தீர்ப்பாயத்தின்

சென்னை:தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் உள்ள காலியிடங்களை நிரப்பியது தொடர்பாக, மத்திய அரசு அறிக்கை அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த, பட்டய கணக்காளரான வெங்கட் சிவகுமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'சென்னையில் உள்ள தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தின், இரு அமர்வுகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப வேண்டும்; தீர்ப்பாயத்தின் மூன்றாவது அமர்வை உடனடியாக இயக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.

இம்மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரரான வெங்கட் சிவகுமார் ஆஜராகி, ''கொச்சியில் புதிய அமர்வு ஏற்படுத்தப்பட்டும், அதற்கு நியமனம் நடக்கவில்லை. அதனால், சென்னை அமர்வு தான், கொச்சி அமர்வுக்கான வழக்குகளை விசாரிக்கிறது,'' என்றார்.
மத்திய அரசு சார்பில், உதவி சொலிசிட்டர் ஜெனரல் ராஜேஷ் விவேகானந்தன் ஆஜராகி, ''கொச்சி அமர்வு இயங்க துவங்கினால், சென்னை அமர்வின் பணிச்சுமை குறைந்து விடும்,'' என்றார்.முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்று, விளம்பரங்கள் வெளியிடப்பட்டிருப்பதாக, மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மூன்றாவது அமர்வு அமைப்பது என்பது, தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தின் தலைவரது தனிப்பட்ட உரிமை எனவும் தெரிவிக்கப்பட்டது.எனவே, காலியிடங்களை நிரப்பியது தொடர்பாக, மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். சென்னை அமர்வில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும் அறிக்கையில் குறிப்பிட வேண்டும். அப்போது தான், சென்னை அமர்வுக்கு கூடுதல் நபர்களின் தேவை பற்றி அறிய முடியும்.இவ்வாறு உத்தரவிட்டு, வரும் 23ம் தேதிக்கு தள்ளி வைத்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X