பொது செய்தி

தமிழ்நாடு

'பலியான 84 சதவீதம் பேர் தடுப்பூசி போடாதவர்கள்'

Added : நவ 18, 2021
Share
Advertisement
சென்னை:''தமிழகத்தில் கொரோனா தொற்றால் மூன்று மாதங்களில் உயிரிழந்தவர்களில், 84 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள்,'' என, பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வ விநாயகம் கூறினார்.அவர் கூறியதாவது:தமிழகத்தில் மூன்று மாதங்களில், 2,011 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அவர்களில், 1,675 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள். அதன் அடிப்படையில், உயிரிழப்பு

சென்னை:''தமிழகத்தில் கொரோனா தொற்றால் மூன்று மாதங்களில் உயிரிழந்தவர்களில், 84 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள்,'' என, பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வ விநாயகம் கூறினார்.

அவர் கூறியதாவது:தமிழகத்தில் மூன்று மாதங்களில், 2,011 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அவர்களில், 1,675 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள். அதன் அடிப்படையில், உயிரிழப்பு வாய்ப்பை அறிவதற்கான கணக்கீடு செய்யப்பட்டது.
அதில், கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களை காட்டிலும், செலுத்தாதவர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டால் உயிரிழப்பு வாய்ப்பு, மூன்றரை மடங்கு அதிகமாக உள்ளது கண்டறியப்பட்டு உள்ளது. அதன்படி, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் உயிரிழந்தவர்களில், 84 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தவில்லை.
எனவே, பொது மக்கள் உண்மையை உணர்ந்து செயல்பட வேண்டும். தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தி கொள்ள லட்சக்கணக்கான மக்கள் ஆர்வம் காட்டுவதை மறுப்பதற்கில்லை. முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள், இரண்டாம் தவணைக்கு வருவதில்லை என்பது தான் வருத்தத்துக்குரிய விஷயம்.
முதல் தவணை தடுப்பூசியே கொரோனாவுக்கு எதிராக செயல்படும் என, நினைக்க வேண்டாம். இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டால் மட்டுமே, உருமாறி கொண்டிருக்கும் வைரஸ்க்கு எதிராக நோய் எதிர்ப்பாற்றால் முழுமையாக உருவாகும். அனைவரும் முறையாக தடுப்பூசி செலுத்தி கொண்டால் தான், தமிழகத்தில் கொரோனா இல்லாத நிலையை எட்ட முடியும்.

எனவே, இன்று நடைபெறும் ஒன்பதாவது மெகா தடுப்பூசி முகாமில், அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள முன்வர வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X