கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ரூ.500 கோடி மண் எடுப்பு பன்னீர்செல்வம் மீது புகார்

Added : நவ 18, 2021
Share
Advertisement
சென்னை:அரசு நிலத்தில் 500 கோடி ரூபாய் மதிப்பிலான கிராவல் மண் எடுத்ததாக முன்னாள் துணை முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு எதிரான புகாரில் வழக்கு பதிவு செய்ய அரசிடம் அனுமதி கோரியிருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தேனி மாவட்டம் உப்பார்பட்டியைச் சேர்ந்த ஞானராஜன் என்பவர் தாக்கல் செய்த மனு: வடவீரநாயக்கன்பட்டி கிராமத்தில் அரசு நிலத்தில் 500 கோடி

சென்னை:அரசு நிலத்தில் 500 கோடி ரூபாய் மதிப்பிலான கிராவல் மண் எடுத்ததாக முன்னாள் துணை முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு எதிரான புகாரில் வழக்கு பதிவு செய்ய அரசிடம் அனுமதி கோரியிருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் உப்பார்பட்டியைச் சேர்ந்த ஞானராஜன் என்பவர் தாக்கல் செய்த மனு: வடவீரநாயக்கன்பட்டி கிராமத்தில் அரசு நிலத்தில் 500 கோடி ரூபாய் மதிப்புள்ள கிராவல் மண்ணை அன்னபிரகாசம் மற்றும் சிலர் எடுத்துள்ளனர். இந்த முறைகேட்டில் முன்னாள் துணை முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு தொடர்பு உள்ளது.இந்த முறைகேடு குறித்து லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் அனுப்பி உள்ளேன். விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு நீதிபதி வி.பாரதிதாசன் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஏ.சரவணன் ஆஜராகி ''புகாரின் அடிப்படையில் ஆரம்பகட்ட விசாரணை நடத்த வேண்டும்'' என்றார்.
போலீஸ் தரப்பில் அரசு வழக்கறிஞர் பிரதாப் ஆஜராகி ''புகார் மீது வழக்கு பதிவு செய்ய லஞ்ச ஒழிப்பு துறை கமிஷனரின் அனுமதி பெறுவதற்காக அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்த உடன் விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்யப்படும்'' என்றார். இதையடுத்து விசாரணையை இரண்டு மாதங்களுக்கு தள்ளி வைத்து நீதிபதி பாரதிதாசன் உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X