சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.1 லட்சம் பரிசு அறிவித்த பா.ம.க., செயலர் மீது வழக்கு

Added : நவ 18, 2021
Share
Advertisement
மயிலாடுதுறை:நடிகர் சூர்யாவை எட்டி உதைப்பவருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும்' என்று பேசிய பா.ம.க., மாவட்ட செயலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.மயிலாடுதுறையில், ஜெய்பீம் திரைப்பட நடிகர் சூர்யாவை கண்டித்து கடந்த 14ம் தேதி பா.ம.க., வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக பா.ம.க., மாவட்ட செயலர் சித்தமல்லி பழனிசாமி தலைமையில் பா.ம.க., நிர்வாகிகள் எஸ்.பி.,

மயிலாடுதுறை:நடிகர் சூர்யாவை எட்டி உதைப்பவருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும்' என்று பேசிய பா.ம.க., மாவட்ட செயலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மயிலாடுதுறையில், ஜெய்பீம் திரைப்பட நடிகர் சூர்யாவை கண்டித்து கடந்த 14ம் தேதி பா.ம.க., வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக பா.ம.க., மாவட்ட செயலர் சித்தமல்லி பழனிசாமி தலைமையில் பா.ம.க., நிர்வாகிகள் எஸ்.பி., அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில் வன்னியர்களுக்கு எதிராக காட்சிகள் அமைத்துள்ள ஜெய்பீம் படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் 'என கூறப்பட்டிருந்தது.
பின்னர் பேசிய பா.ம.க., மாவட்ட செயலர் சித்தமல்லி பழனிசாமி, 'ஜெய்பீம் திரைப் படத்தில் நடித்த நடிகர் சூர்யாவை காலால் எட்டி உதைக்கும் இளைஞர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் பரிசு வழங்கப்படும். மயிலாடுதுறை மாவட்டத்தில் இனி நடிகர் சூர்யா நடித்த படங்களை திரையிட அனுமதிக்க மாட்டோம்' என்றார்.

மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக பழனிசாமி மீது மயிலாடுதுறை போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சித்தமல்லி பழனிசாமி கடந்த சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., சார்பில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X