லஞ்ச ஒழிப்பு பிரிவில் ஆர்.எஸ்.பாரதி ஆஜர்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

லஞ்ச ஒழிப்பு பிரிவில் ஆர்.எஸ்.பாரதி ஆஜர்

Added : நவ 18, 2021
Share
சென்னை:லஞ்ச ஒழிப்பு பிரிவு அலுவலகத்தில், தி.மு.க., - எம்.பி.,யான ஆர்.எஸ்.பாரதி ஆஜரானார்.சென்னை கோயம்பேடு அருகே, அரசுக்கு சொந்தமான 10.5 ஏக்கர் நிலத்தை, அ.தி.மு.க., ஆட்சியின்போது, முன்னாள் முதல்வர்கள் பழனிசாமி, பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் சட்டத்துக்கு விரோதமாக, தனியாருக்கு விற்று விட்டதாக, ஆர்.எஸ்.பாரதி, லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்திருந்தார்.இந்த புகார் குறித்து,

சென்னை:லஞ்ச ஒழிப்பு பிரிவு அலுவலகத்தில், தி.மு.க., - எம்.பி.,யான ஆர்.எஸ்.பாரதி ஆஜரானார்.
சென்னை கோயம்பேடு அருகே, அரசுக்கு சொந்தமான 10.5 ஏக்கர் நிலத்தை, அ.தி.மு.க., ஆட்சியின்போது, முன்னாள் முதல்வர்கள் பழனிசாமி, பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் சட்டத்துக்கு விரோதமாக, தனியாருக்கு விற்று விட்டதாக, ஆர்.எஸ்.பாரதி, லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்திருந்தார்.

இந்த புகார் குறித்து, ஆலந்துாரில் உள்ள லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸ் அலுவலகத்தில், ஆர்.எஸ்.பாரதி நேற்று ஆஜராகி விளக்கம் அளித்தார்.பின், அவர் அளித்த பேட்டி:அரசுக்கு சொந்தமான இடத்தை, தேர்தலுக்கு குறுகிய காலமே இருந்தபோது விற்பனை செய்தனர்.
அந்த இடத்தில் ஒரு சதுர அடி 25 ஆயிரம் ரூபாய்; ஆனால், 12 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.இதனால் அரசுக்கு, 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில் நான் அளித்த ஆதாரம் குறித்து, வெளிப்படையாக கூற முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X