தமிழ் மொழி வளர்ச்சி பணிக்கு சிறப்பு குழு தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தமிழ் மொழி வளர்ச்சி பணிக்கு சிறப்பு குழு தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

Added : நவ 18, 2021
Share
சென்னை:தமிழ் மொழி வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்ய நிரந்தரமாக சிறப்புக் குழு அமைக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.உலக தமிழ் ஆராய்ச்சி அறக்கட்டளை தலைவரும் வழக்கறிஞருமான சி.கனகராஜ் தாக்கல் செய்த மனு:மிகவும் பழமை வாய்ந்தது தமிழ் மொழி; 4000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. யுனெஸ்கோ அறிக்கையின்படி முதல் பழமையானது தமிழ் மொழி. கலை

சென்னை:தமிழ் மொழி வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்ய நிரந்தரமாக சிறப்புக் குழு அமைக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உலக தமிழ் ஆராய்ச்சி அறக்கட்டளை தலைவரும் வழக்கறிஞருமான சி.கனகராஜ் தாக்கல் செய்த மனு:மிகவும் பழமை வாய்ந்தது தமிழ் மொழி; 4000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. யுனெஸ்கோ அறிக்கையின்படி முதல் பழமையானது தமிழ் மொழி. கலை பண்பாடு பாரம்பரியம் தமிழ் மொழி பாதுகாப்புக்கு 1956 வரை சட்டப்பூர்வ பாதுகாப்பு இல்லை.
தமிழ் அலுவல் மொழி சட்டம் 1956ல் வந்தும் 2020ம் ஆண்டு வரை புதிய திருத்தங்கள் எதுவும் வரவில்லை. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முயற்சியால் தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தது.சென்னையை தலைமையிடமாக வைத்து தமிழ் பல்கலை துவங்க வேண்டும். உயர் நீதிமன்றம் கீழமை நீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் மொழி பெயர்க்க வேண்டும். தமிழ் மொழி அமல்படுத்தும் குழுவை ஏற்படுத்த வேண்டும்.
அரசு சுற்றறிக்கை மற்றும் அரசாணைகள் தமிழ் மொழியில் வர வேண்டும். கோவில்களில் தமிழ் மொழியில் அர்ச்சனை செய்ய வேண்டும்.எனவே தமிழ் மொழி வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்ய தமிழ் அறிஞர்கள் அடங்கிய நிரந்தர சிறப்பு குழுவை அமைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு நீதிபதிகள் எம்.துரைசாமி சத்தியநாராயண பிரசாத் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரரான கனகராஜ் ஆஜராகி வாதாடினார்.அரசு தரப்பில் பதில் அளிக்க அரசு பிளீடர் முத்துக்குமார் 'நோட்டீஸ்' பெற்று கொண்டார். ஆறு வாரங்களில் பதில் அளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X