அரசியல் செய்தி

தமிழ்நாடு

சென்னை உஷ்ஷ்ஷ்: ஸ்டாலினை நினைச்சா சிரிப்பு தான் வருதாம்'

Updated : நவ 18, 2021 | Added : நவ 18, 2021 | கருத்துகள் (65)
Share
Advertisement
ஸ்டாலினை நினைச்சா சிரிப்பு தான் வருதாம்'சென்னை: தமிழகம் முழுதும் மழை -வெள்ளம் புகுந்ததில், மக்கள் கடும் துயரத்துக்கு ஆளாகினர். குறிப்பாக, 'சென்னையில் மழை நீர் வடிகாலை சரிவர பராமரிக்காததோடு, 'ஸ்மார்ட் சிட்டி' என்ற பெயரில், ரோடுகளையும், கால்வாய்களையும் தோண்டி போட்டதன் விளைவு தான், மழை நீர் வடியாமல், வீடுகளுக்குள் புகுந்தது' என கடந்த ஆட்சியின்
சென்னை, உஷ்ஷ்ஷ்., ஸ்டாலின், சிரிப்பு,


ஸ்டாலினை நினைச்சா சிரிப்பு தான் வருதாம்'சென்னை: தமிழகம் முழுதும் மழை -வெள்ளம் புகுந்ததில், மக்கள் கடும் துயரத்துக்கு ஆளாகினர். குறிப்பாக, 'சென்னையில் மழை நீர் வடிகாலை சரிவர பராமரிக்காததோடு, 'ஸ்மார்ட் சிட்டி' என்ற பெயரில், ரோடுகளையும், கால்வாய்களையும் தோண்டி போட்டதன் விளைவு தான், மழை நீர் வடியாமல், வீடுகளுக்குள் புகுந்தது' என கடந்த ஆட்சியின் செயல்பாடுகளை, ஆளுங்கட்சியினர் விமர்சித்தனர். இந்த கால்வாய் பராமரிப்பு, துார் வாரும் பணி, ஸ்மார்ட் சிட்டி உருவாக்கம் போன்ற எல்லா பணிகளிலும், கடந்த கால ஆளுங்கட்சியினர் கொள்ளை அடித்துள்ளனர். அதெல்லாம் விசாரணை கமிஷன் அமைத்து விசாரிக்கப்படும். தவறிழைத்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவர் என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

இதையடுத்து, முன்னாள் அமைச்சர் ஒருவர், முன்னாள் முதல்வர் பழனிசாமியிடம், இது குறித்து கவலையுடன் பேசியிருக்கிறார். அதற்கு பதில் அளித்த பழனிசாமி, 'இதுக்கெல்லாம் கவலையே படாதீங்க; ஸ்டாலின் சொல்லியிருக்கிறதை நினைச்சு சிரிப்பு தான் வருது. விசாரணை கமிஷன் அமைக்கட்டும்; நல்லா விசாரிக்கட்டும். தி.மு.க.,விலேயே எத்தனை எம்.எல்.ஏ.,க்களுக்கு கமிஷன் போய் சேர்ந்தது என்ற விஷயங்களையும், கமிஷன் முன் சேர்த்தே சொல்வோம்.'அப்ப, யார் கமிஷன் பேர்வழி என்பது வெளியே வரட்டும். அதை வைத்து, யார் நல்லவர், யார் கெட்டவர் என்பதை மக்கள் முடிவெடுக்கட்டும்' என சொன்னாராம். பழனிசாமியின் கேஷுவலான அணுகுமுறை பற்றி, அந்த முன்னாள் அமைச்சர் சிலாகிக்கிறாராம்.


latest tamil newsஅமைச்சர் பெயரில் 'டீலிங்' முடிக்கும் பி.ஏ.,!

சென்னை: வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி கட்டுப்பாட்டில், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., உள்ளது. ஆனால், அதிகாரிகள் பொறுப்பாக நடந்து கொள்வர் என நினைத்து அமைச்சர், சி.எம்.டி.ஏ., விவகாரங்களில் அதிகமாக தலையிடுவது இல்லை.

ஆனால், அமைச்சரின் உதவியாளர் என்று கூறப்படும் முன்னாள் வட்டாட்சியர் ஒருவர், சி.எம்.டி.ஏ.,வை உயரதிகாரிகள் துணையுடன் ஆட்டிப் படைப்பதாக கூறப்படுகிறது. இங்கு அமலாக்கப் பிரிவில் உள்ள ரவிக்குமார், விஜயலட்சுமி ஆகியோர், உதவியாளரின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்படுவதாக கூறப்படுகிறது.கட்டுமான திட்டங்களுக்கு பணி நிறைவு சான்று வழங்குவது தொடர்பாக, அமைச்சருக்கே தெரியாமல், தனியார் கிளப்பில் வைத்து பல 'டீலிங்'குகளை முடிப்பதாகவும், இதற்கு உறுப்பினர் செயலரின் மறைமுக ஆசி இருப்பதாகவும் 'பில்டர்'கள் புகார் கூறுகின்றனர். 'முதல்வர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்தால் தான் சி.எம்.டி.ஏ.,வை, அந்த மன்மதனிடம் இருந்து காப்பாற்ற முடியும்' என்கின்றனர், விபரம் தெரிந்தவர்கள்.


மாநில தலைமை மீது மந்திரிக்கு கோபம் ஏன்?சென்னை: தேசிய கட்சியின் மாநிலத் தலைவராக புதியவர் நியமிக்கப்பட்டதும், கட்சிக்கான புது நிர்வாகிகளும் நியமிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்பட்டது; ஆனால், நடக்கவில்லை. மாநிலத் தலைவர் தான், தேசிய தலைமையோடு நெருக்கமான உறவில் இருப்பவராச்சே; நிர்வாகிகள் பட்டியல் அறிவிப்பதில் அவருக்கு என்ன சிக்கல்... என, புரியாமல் கட்சியினர் தடுமாறினர்.

இந்நிலையில், தேசிய தலைமையில் இருப்போரிடம் இருந்து, ரகசிய தகவல் ஒன்று கசிந்திருக்கிறது. தேசிய அளவில் கட்சியில் முக்கியத்துவத்துடன் இருக்கும் அமைச்சர் ஒருவரை, கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் ஒருவர் சந்தித்தாராம். அப்போது, மேலிடப் பொறுப்பாளர் குறித்து, மாநிலத் தலைவர் சொன்னதாக சில தகவல்கள் பகிரப்பட்டதாம்.

இதையடுத்து, அமைச்சரிடம் மேலிடப் பொறுப்பாளர் உண்மை போல சில தகவல்களை எடுத்துச் சொன்னாராம். உடனே, மாநிலத் தலைவர் மீது கோபமான அமைச்சர், 'மாநிலத் தலைவர் தன்னிச்சையாக எதையும் செய்ய அனுமதிக்க வேண்டாம். 'கட்சியின் துணை அமைப்பு போல செயல்படும் ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தினரின் அறிவுறுத்தலில் கட்சியை நடத்தும்படி, மாநிலத் தலைவருக்கு சொல்லி விடுங்கள்' என தெரிவித்து விட்டார். இதையடுத்தே, மாநில நிர்வாகிகளை, கட்சியின் மாநிலத் தலைவரால் நியமிக்க முடியவில்லை. இதற்கிடையே, மேலிட அறிவுறுத்தல்படி, ஆர்.எஸ்.எஸ்., பின்புலத்தில் கட்சிக்கு வந்து, கட்சியை வழி நடத்தும் பொறுப்பில் இருக்கும் முக்கியப் பிரமுகர், மாநிலத் தலைவரை முழுமையாக தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்துக் கொண்டிருக்கிறார்.


Advertisement
வாசகர் கருத்து (65)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
G.Prabakaran - Chennai,இந்தியா
19-நவ-202113:15:18 IST Report Abuse
G.Prabakaran ஒரு உதாரணத்திற்கு பாண்டி பஜார் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை பாருங்க அங்கே எப்படி மழைநீர் எளிதில் செல்லாதவாறு உள்ளது என்பதை பார்த்தாலே தெரிந்து விடும் சென்ற அரசின் smart city லட்சணம்.
Rate this:
Cancel
Krishna -  ( Posted via: Dinamalar Android App )
19-நவ-202100:12:56 IST Report Abuse
Krishna IDHANAAL THERIVIPPADHU ENNA ENDRAAL ULAGIN MIGA PERIYA UTTHAMA KUDUMBAM KATTUMARAM.
Rate this:
Cancel
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
18-நவ-202123:06:11 IST Report Abuse
DARMHAR என்னமோ போங்க தடியெடுத்தவன் தண்டல்காரன் என்பது தான் அரசியலில் ஒருவர் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை. நாடு எக்கேடாகவாது கெடட்டும் .தங்கள் சொந்த கஜானாவில் பண மூட்டைகள் நிரப்பினால் சரி என்பதே எந்த அரசியல்வாதியினுடைய கொள்கை என்பதை மக்கள் புரிந்து கொள்ளாமலா இருக்கிறார்கள்? யாரோ ஒரு தமிழ் நாட்டில் முதலமைச்சராக இருந்தவர் சொன்னார் " கொடுப்பதை கொடுத்தது பெற வேண்டியதை பெற்றுக்கொள்ளுங்கள்" என்று. யார் இவ்வாறு சொன்னார் என்று இங்கே குறிப்பிட வேண்டியதே இல்லை .அது முதலமைச்சருக்கே தெரியும்.. .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X