அரசியல் செய்தி

தமிழ்நாடு

இனி எல்லாமே துரை தான்! வைகோ மகனுக்காற்றிய நன்றி

Added : நவ 18, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
ம.தி.மு.க., தலைமை நிலைய செயலராக துரையை நியமித்தபின், அவருக்கு முழு அதிகாரம் அளிக்கும் வகையில், இதுவரை இல்லாத வகையில், அக்கட்சியின் சட்ட திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ மகன் துரை, சமீபத்தில் ஓட்டெடுப்பு வாயிலாக தலைமை நிலைய செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.அவருக்கு பதவி வழங்கியதை எதிர்த்து, இளைஞரணி செயலர் கோவை ஈஸ்வரன் உள்ளிட்ட சில

ம.தி.மு.க., தலைமை நிலைய செயலராக துரையை நியமித்தபின், அவருக்கு முழு அதிகாரம் அளிக்கும் வகையில், இதுவரை இல்லாத வகையில், அக்கட்சியின் சட்ட திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ மகன் துரை, சமீபத்தில் ஓட்டெடுப்பு வாயிலாக தலைமை நிலைய செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.அவருக்கு பதவி வழங்கியதை எதிர்த்து, இளைஞரணி செயலர் கோவை ஈஸ்வரன் உள்ளிட்ட சில நிர்வாகிகள், கட்சியிலிருந்து விலகினர். இந்நிலையில், வைகோவை சந்திக்க வேண்டும் என்றால், இனி துரையிடம் தான் அனுமதி பெற வேண்டும்; பொதுச் செயலர் அளிக்கும் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும் என்ற புதிய சட்ட விதி, அக்கட்சியில் உருவாக்கப்பட்டுள்ளது.

துரைக்கு முழு அதிகாரம் அளித்ததன் வாயிலாக, மகன் கைப்பிடிக்குள் தந்தை உள்ளார் என்ற விமர்சனம் ம.தி.மு.க., வினர் மத்தியில் எழுந்துள்ளது.'தலைமை நிலைய செயலர் பணிகள்' என்ற தலைப்பில், வைகோ வெளியிட்ட அறிவிப்பு:

* பொதுச் செயலர் அளிக்கும் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும்

* தலைமை நிலையத்தின் அன்றாட அலுவல்களை நிறைவேற்றவும், கட்சியின் அனைத்து அமைப்புகளுடன் தொடர்பு கொள்ளவும், தலைமை நிலையம் இயங்கி வருகிறது. பொதுச் செயலர் பொறுப்பில் இயங்கும் தலைமை நிலைய பணிகளை, தலைமை நிலைய செயலர் ஒருங்கிணைப்பார்

* பொதுச் செயலரின் சுற்றுப் பயணங்கள், சந்திப்புகள் மற்றும் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் கடமையையும், தலைமை நிலைய செயலர் மேற்கொள்வார்

* கட்சி நடவடிக்கைகள், நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தல்; அனைத்துக் கட்சிகள், இயக்கங்கள் உள்ளிட்ட மற்ற பல்வேறு அமைப்புகளுடன் மேற்கொள்ளப்படும் தொடர்புகளில், பொதுச் செயலர் உத்தரவுகளை நிறைவேற்றுவதும், தலைமை நிலையச் செயலர் பணியாக கருதப்படும்

* ம.தி.மு.க., சார்பில் அமைக்கப்பட உள்ள ஐ.டி., அணியின் பொறுப்பாளர் பொறுப்பும், கூடுதலாக தலைமை நிலைய செயலரே கவனிப்பார்.இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Milirvan - AKL,நியூ சிலாந்து
18-நவ-202113:10:07 IST Report Abuse
Milirvan சுயநல கோமாளி..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X