பொது செய்தி

இந்தியா

உள்நாட்டில் தயாரான ஹெலிகாப்டர் :தளபதிகளிடம் பிரதமர் ஒப்படைப்பு

Added : நவ 18, 2021
Share
Advertisement
புதுடில்லி:உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள இலகு ரக ஹெலிகாப்டர்களை முப்படை தலைமை தளபதிகளிடம் பிரதமர் மோடி நாளை ஒப்படைக்க உள்ளார்.உத்தர பிரதேசத்தின் ஜான்சி மாவட்டத்தில் தேசிய பாதுகாப்பு அர்ப்பணிப்பு விழா நேற்று துவங்கியது. நாளை பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார்.இதுகுறித்து மத்திய அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:தேசிய பாதுகாப்பு

புதுடில்லி:உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள இலகு ரக ஹெலிகாப்டர்களை முப்படை தலைமை தளபதிகளிடம் பிரதமர் மோடி நாளை ஒப்படைக்க உள்ளார்.

உத்தர பிரதேசத்தின் ஜான்சி மாவட்டத்தில் தேசிய பாதுகாப்பு அர்ப்பணிப்பு விழா நேற்று துவங்கியது. நாளை பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார்.இதுகுறித்து மத்திய அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:தேசிய பாதுகாப்பு அர்ப்பணிப்பு விழாவில் நாளை பங்கேற்க இருக்கும் பிரதமர் மோடி 'சுயசார்பு இந்தியா' திட்டத்தை ஊக்குவிக்கும் விதமாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள உபகரணங்களை முப்படை தலைமை தளபதிகளிடம் ஒப்படைக்க உள்ளார்.
அதன்படி எச்.ஏ.எல். எனப்படும் 'ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடட்' நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள இலகு ரக போர் ஹெலிகாப்டர்களை விமானப்படை தலைமை தளபதியிடம் பிரதமர் ஒப்படைக்க உள்ளார்.மேலும் உள்நாட்டு நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டு உள்ள 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா சிறியவகை விமானங்களையும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் தயாரிக்கப்பட்டுள்ள அதிநவீன எலக்ட்ரானிக் பாதுகாப்பு கவசத்தையும் ஒப்படைக்கப்பட உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X