பொது செய்தி

தமிழ்நாடு

பொது போக்குவரத்தை பயன்படுத்தி காற்று மாசை குறைக்கலாம்

Added : நவ 18, 2021
Share
Advertisement
சென்னை:''அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணியாற்றுவோர் வாரத்திற்கு ஒருநாள் பொது போக்குவரத்தை பயன்படுத்தினால் காற்று மாசை குறைக்கலாம்'' என மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் உதயன் கூறினார்.பெரிய நகரங்களில் ஏற்படும் காற்று மாசு 72 சதவீதம் வாகன புகையால் ஏற்படுவதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.இதனால் மூச்சுதிணறல் கண் எரிச்சல் போன்ற
பொது போக்குவரத்தை பயன்படுத்தி காற்று மாசை குறைக்கலாம்

சென்னை:''அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணியாற்றுவோர் வாரத்திற்கு ஒருநாள் பொது போக்குவரத்தை பயன்படுத்தினால் காற்று மாசை குறைக்கலாம்'' என மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் உதயன் கூறினார்.
பெரிய நகரங்களில் ஏற்படும் காற்று மாசு 72 சதவீதம் வாகன புகையால் ஏற்படுவதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.இதனால் மூச்சுதிணறல் கண் எரிச்சல் போன்ற பாதிப்புகள்ஏற்படுகின்றன.
எனவே மாசற்ற பயணத்திற்காக புதன்கிழமை தோறும் சொந்த வாகனங்களை தவிர்த்து பொது போக்குவரத்தை பயன்படுத்தும் நடைமுறையை வாரிய அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் நேற்று துவக்கினர்.இதன்படி வாரிய பணியாளர்கள் பலர் பஸ்களில் அலுவலகம் வந்தனர். வாரிய தலைவர் உதயன் உள்ளிட்ட சில அதிகாரிகள் சைக்கிளில் வந்தனர்.
உதயன் கூறியதாவது:இந்தியாவில் காற்று மாசு அதிகம் உள்ள 132 நகரங்களில் சென்னையும் ஒன்று. எனவே வாரிய அலுவலக ஊழியர்கள் புதன்கிழமை தோறும் பொது போக்குவரத்து மின்சார வாகனம் அல்லது சைக்கிளில் அலுவலகம் வரும் நடைமுறை துவக்கப்பட்டுள்ளது.இதை அனைத்து துறைகளிலும் பின்பற்ற அரசை கேட்டு கொண்டுள்ளோம். பொது போக்குவரத்தை பயன்படுத்தினால் காற்று மாசை பெரிய அளவில் குறைக்க முடியும்.இவ்வாறு அவர்கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X