சமூக செயற்பாட்டாளர்கள் வழக்கு; திரிபுராவுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Updated : நவ 18, 2021 | Added : நவ 18, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுடில்லி-'சிறுபான்மையினர் தாக்கப்படுவதாக சமூக வலை தளத்தில் அறிக்கைகளை வெளியிட்ட, ஒரு பத்திரிகையாளர் உட்பட மூன்று சமூக செயற்பட்டாளர்கள் மீது, கடுமையான தேசவிரோத சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள வழக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது' என, திரிபுரா போலீசுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் முதல்வர் பிப்லப் குமார்

புதுடில்லி-'சிறுபான்மையினர் தாக்கப்படுவதாக சமூக வலை தளத்தில் அறிக்கைகளை வெளியிட்ட, ஒரு பத்திரிகையாளர் உட்பட மூன்று சமூக செயற்பட்டாளர்கள் மீது, கடுமையான தேசவிரோத சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள வழக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது' என, திரிபுரா போலீசுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.



latest tamil news


வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் முதல்வர் பிப்லப் குமார் தேப் தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்துள்ளது.கடந்த, அக்டோபரில் அண்டை நாடான வங்கதேசத்தில், துர்கா பூஜையின்போது முஸ்லிம் மதத்தை அவமதித்ததாக ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.அதையடுத்து, திரிபுராவில், ஹிந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம், போராட்டத்தில் ஈடுபட்டன. அப்போது, வன்முறை வெடித்தது.இதில், சிறுபான்மையினரான முஸ்லிம்கள் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாயின.

இது தொடர்பாக, பத்திரிகையாளர் ஷியாம் மீரா சிங், வழக்கறிஞர்கள் முகேஷ், அன்சருல் ஹக் அடங்கிய சமூக செயற்பாட்டாளர்கள் குழு ஆய்வு மேற்கொண்டது. அதைத் தொடர்ந்து, 'திரிபுரா பற்றி எறிகிறது' என, சமூக வலை தளத்தில் அவர்கள் தங்களுடைய அறிக்கையை தாக்கல் செய்தனர்.அதையடுத்து அவர்கள் மீது, திரிபுரா போலீசார், 'உபா' எனப்படும் தேச விரோத சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்து உள்ளனர்.


latest tamil news


இதை எதிர்த்து, இந்த மூவரும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.அதை விசாரணைக்கு ஏற்ற, தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, ஹீமா கோஹ்லி அமர்வு, மூவர் மீதும் எந்த நடவடிக்கைகயும் எடுக்க கூடாது என, திரிபுரா போலீசாருக்கு தடை விதித்துள்ளது.மேலும், இவர்கள் தாக்கல் செய்துள்ள மனு குறித்து பதிலளிக்கும்படியும் உத்தரவிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumar - Madurai,இந்தியா
18-நவ-202114:02:15 IST Report Abuse
Kumar அப்ப யாரும் என்ன வேண்டுமனாலும் செய்யலாமா? வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
Cancel
Suppan - Mumbai,இந்தியா
18-நவ-202113:38:50 IST Report Abuse
Suppan திரிபுரா "கலவரம்" சம்பந்தமாக வெளியான படங்கள் போலியானவை என்று தெரிகிறது. மஹாராஷ்டிராவில் இதனாலேயே கலவரம் வெடித்தது. இதில் இந்த "பத்திரிக்கையாளர்கள்" என்று சொல்லப் படுபவர்களுக்கும் பொறுப்பு உண்டு. வழக்கம் போல காங்கிரஸ் டூல்கிட் தயாரித்து கலவரங்களை வழி நடத்தியது என்றும் சொல்கிறார்கள்.
Rate this:
Cancel
RandharGuy - Kolkatta,இந்தியா
18-நவ-202110:12:20 IST Report Abuse
RandharGuy எளியவனை வலியவன் கொடுங்கோல் ஆட்சி செய்தால் .. வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் வுண்டு ...ஆகா மொத்தம் குட்டுவாங்கிய அரசுக்கு ...மேலும் மேலும் குட்டு வாங்கினாலும் ....புத்தி வரவில்லையா .......புவர் கவெர்னன்ஸ் உச்ச கட்டம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X