ஓரின திருமணத்திற்கு சுவிட்சர்லாந்து அனுமதி

Updated : நவ 18, 2021 | Added : நவ 18, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
ஜெனீவா-சுவிட்சர்லாந்து அரசு ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணத்திற்கு, சட்ட ரீதியிலான அனுமதியை வழங்கியுள்ளது. மேற்கு ஐரோப்பாவில் ஓரின திருமணத்தை சட்டப்படி அங்கீகரிக்காத ஒரு சில நாடுகளில் சுவிட்சர்லாந்தும் ஒன்று.இந்நிலையில், சுவிட்சர்லாந்தில் இரு மாதங்களுக்கு முன் 'அனைவருக்கும் திருமண உரிமை சட்டம்' பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேறியது. இதையடுத்து ஓரினச்

ஜெனீவா-சுவிட்சர்லாந்து அரசு ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணத்திற்கு, சட்ட ரீதியிலான அனுமதியை வழங்கியுள்ளது. மேற்கு ஐரோப்பாவில் ஓரின திருமணத்தை சட்டப்படி அங்கீகரிக்காத ஒரு சில நாடுகளில் சுவிட்சர்லாந்தும் ஒன்று.



latest tamil news


இந்நிலையில், சுவிட்சர்லாந்தில் இரு மாதங்களுக்கு முன் 'அனைவருக்கும் திருமண உரிமை சட்டம்' பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேறியது. இதையடுத்து ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணத்திற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்படுவதாக, சுவிட்சர்லாந்து அரசு அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு ஜூலை 1 முதல் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணத்திற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்பட உள்ளது.


latest tamil news


அதன்பின் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணமாகாமல் சேர்ந்து வாழ்வது சட்ட மீறலாக கருதப்படும். ஓரின தம்பதியர் குழந்தைகளை தத்தெடுக்கவும், ஓரினச் சேர்க்கையாளர்கள் வெளிநாடுகளைச் சேர்ந்த தன் பாலினத்தவரை திருமணம் செய்து குடியுரிமை பெறவும் முடியும்.புதிய சட்டத்தின்படி, 2022 ஜனவரி 1 முதல் சுவிட்சர்லாந்தில் வசிக்கும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஓரின தம்பதியருக்கு திருமண அங்கீகாரம் வழங்கப்படும். அவர்களுக்கு தற்போது திருமணமாகாத ஜோடி என்ற அந்தஸ்து தான் வழங்கப்படுகிறது.


Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivagiri - chennai,இந்தியா
18-நவ-202113:37:47 IST Report Abuse
Sivagiri எல்லோரும் ஓரினம் ஓர்குலம் - என்பது இதுதானோ இதனால் என்ன பிரயோஜனம் என்பது யாரவது சொன்னால் தேவலை . . .
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
18-நவ-202108:38:50 IST Report Abuse
Lion Drsekar நம் நாட்டிலேயே ஓரினத்தவருக்கு நீதியரசராக பதவி ஏற்க பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக நேற்றைய செய்தி வந்துள்ளது, பாராட்டுக்கள், வாழ்க வளமுடன் ( வேறு வழி இல்லை வாழத்தான் வேண்டும் ) வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X