பொது செய்தி

தமிழ்நாடு

மாதவரம் ஆவின் பூங்காவில் உறுதியிழந்த மரத்தால் பீதி

Added : நவ 18, 2021
Share
Advertisement
மாதவரம் : ஆவின் பூங்காவில் உறுதியிழந்துள்ள பெரிய மரத்தால், பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர்.சென்னை மாதவரம் பால்பண்ணை அருகே உள்ள ஆவின் பூங்காவில், பாலகம் உள்ளது. இங்கு பால், நெய், இனிப்பு, ஐஸ் கிரீம் என, அனைத்து வகையான ஆவின் பொருட்கள் விற்பனையாகின்றன. அந்த பாலகத்தைச் சுற்றி இயற்கைச் சூழலுடன் ஆவின் பூங்கா உள்ளது. அதனால் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் உட்பட,
 மாதவரம் ஆவின் பூங்காவில் உறுதியிழந்த மரத்தால் பீதி

மாதவரம் : ஆவின் பூங்காவில் உறுதியிழந்துள்ள பெரிய மரத்தால், பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர்.

சென்னை மாதவரம் பால்பண்ணை அருகே உள்ள ஆவின் பூங்காவில், பாலகம் உள்ளது. இங்கு பால், நெய், இனிப்பு, ஐஸ் கிரீம் என, அனைத்து வகையான ஆவின் பொருட்கள் விற்பனையாகின்றன. அந்த பாலகத்தைச் சுற்றி இயற்கைச் சூழலுடன் ஆவின் பூங்கா உள்ளது. அதனால் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் உட்பட, சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பலரும், தங்கள் குடும்பத்தினருடன் இங்கு வந்து செல்வது வழக்கம்.

சமீபத்திய மழையால், பாலகத்தை ஒட்டி வளர்ந்துள்ள பெரிய மரம் உறுதியிழந்து உள்ளது. மேலும், பலத்த காற்று, மழை நீடித்தால், அந்த மரம் வேரோடு சாய்ந்து, பாலகத்தின் மீது விழுந்து விபத்து, உயிரிழப்பு ஏற்படும் ஆபத்து உள்ளதாக, அங்கு செல்வோர் அஞ்சுகின்றனர். மரம் விழுந்து அசம்பாவிதம் நடக்கும் முன், ஆவின் நிர்வாகம் அந்த மரத்தின் நிலையையும், மக்களுக்கான பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X