பொது செய்தி

தமிழ்நாடு

'மாஜி' எஸ்.ஐ., கடத்தல் வழக்கு தேடப்பட்ட ரவுடி பிடிபட்டார்

Added : நவ 18, 2021
Share
Advertisement
சேத்துப்பட்டு : சேத்துப்பட்டு அருகே, முன்னாள் காவல் உதவியாளர் கடத்தப்பட்ட வழக்கில், கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட ரவுடியை போலீசார் நேற்று கைது செய்தனர்.சேத்துப்பட்டு, ஹாரிங்டன் சாலையைச் சேர்ந்தவர் மூசா, 76. சென்னையில் காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து, விருப்ப ஓய்வு பெற்றவர்.பின், 'மூசா குலோவேட் டிரைட் விங்ஸ்' என்ற நிறுவனம் துவக்கி, சந்தன மரம் உள்ளிட்டவை வியாபாரம்
 'மாஜி' எஸ்.ஐ., கடத்தல் வழக்கு தேடப்பட்ட ரவுடி பிடிபட்டார்

சேத்துப்பட்டு : சேத்துப்பட்டு அருகே, முன்னாள் காவல் உதவியாளர் கடத்தப்பட்ட வழக்கில், கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட ரவுடியை போலீசார் நேற்று கைது செய்தனர்.

சேத்துப்பட்டு, ஹாரிங்டன் சாலையைச் சேர்ந்தவர் மூசா, 76. சென்னையில் காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து, விருப்ப ஓய்வு பெற்றவர்.பின், 'மூசா குலோவேட் டிரைட் விங்ஸ்' என்ற நிறுவனம் துவக்கி, சந்தன மரம் உள்ளிட்டவை வியாபாரம் செய்து வந்தார். இதில், பல வழக்குகளை சந்தித்துள்ளார்.கடந்த அக்., 3ம் தேதி கானாத்துாரில் உள்ள மகன் பஷீரின் வீட்டிற்கு, காரில் மூசா சென்று உள்ளார். அப்போது சேத்துப்பட்டு அருகில், துப்பாக்கி முனையில் மூசாவை ஒரு கும்பல் காரில் கடத்தியது.

3 கோடி ரூபாய் கேட்டு மகன் பஷீரையும் அக்கும்பல் மிரட்டியது.இது குறித்து கானாத்துார் போலீசார் விசாரித்தனர்.சம்பவம் தொடர்பாக, கீழ்ப்பாக்கம் தனிப்படை போலீசார், வியாசர்பாடியைச் சேர்ந்த குமார், 48, சீர்காழியைச் சேர்ந்த பிரகாஷ், 35, போரூரைச் சேர்ந்த சங்கீதா, 28, உட்பட நான்கு பேரை கைது செய்தனர்.இந்நிலையில், கடத்தல் வழக்கில் மூளையாக செயல்பட்ட எண்ணுாரைச் சேர்ந்த, ரவுடி பர்மா மோகன், 32, என்பவர், நேற்று சேத்துப்பட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X