சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆன் லைன் தேர்வு நடத்தக் கோரி கல்லூரி மாணவர்கள் போராட்டம்

Added : நவ 18, 2021
Share
Advertisement
கிள்ளை : ஆன் லைன் மூலம் பருவ தேர்வுகள் நடத்தக்கோரி, சி.முட்லுார் அரசு கல்லுாரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.தமிழகத்தில், கொரோனா தொற்று காரணமாக அரசு கல்லுாரிகள் திறக்கப்படாமல், கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவர்களுக்கு, ஆன் லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டது.மூன்று பருவ தேர்வுகளையும் மாணவர்கள் ஆன் லைன் மூலமே,
 ஆன் லைன் தேர்வு நடத்தக் கோரி  கல்லூரி மாணவர்கள் போராட்டம்

கிள்ளை : ஆன் லைன் மூலம் பருவ தேர்வுகள் நடத்தக்கோரி, சி.முட்லுார் அரசு கல்லுாரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தமிழகத்தில், கொரோனா தொற்று காரணமாக அரசு கல்லுாரிகள் திறக்கப்படாமல், கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவர்களுக்கு, ஆன் லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டது.மூன்று பருவ தேர்வுகளையும் மாணவர்கள் ஆன் லைன் மூலமே, எழுதினர்.தற்போது, கொரோனா தொற்று குறைந்ததால், கடந்த செப்டம்பர் மாதம் முதல் கல்லுாரிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு, ஷிப்ட் முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அடுத்த மாதம் நடைபெற உள்ள பருவதேர்வை, ஆன்லைன் மூலம் நடத்தாமல் நேரடியாக நடத்தப்படும் என, உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது

.இந்த அறிவிப்பை கண்டித்து சிதம்பரம் அடுத்த சி.முட்லுார் அரசு கலைக் கல்லுாரி மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து, காலை 11 மணியளவில் உள்ளிருப்பு போராட்டத்தில், ஈடுப்பட்டனர். தகவலறிந்த, சிதம்பரம் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.ஆன் லைன் மூலம் பருவ தேர்வுகள் நடத்த வேண்டும் என, மாணவர்கள்கோரிக்கை வைத்தனர்.அதற்கு உங்களது கோரிக்கைகள் பல்கலைக்கழக பதிவாளருக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் கல்லுாரி முதல்வர் சாந்தி, உறுதி அளித்ததை ஏற்று, மதியம் 12;00 மணியளவில் அனைவரும் கலைந்துசென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X