சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடலுாரில் சாலை சரிந்து போக்குவரத்து பாதிப்பு

Added : நவ 18, 2021
Share
Advertisement
கடலுார் : கடலுார் செம்மண்டலம் அருகே சாலை சரிந்து பள்ளம் ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.கடலுார் செம்மண்டலத்தில் இருந்து கம்மியம்பேட்டை வழியாக இணைப்பு சாலை உள்ளது. இதன் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.செம்மண்டலம் அருகே இச்சாலையோரம் நேற்று தனிநபர் ஒருவர் கட்டடம் கட்ட பொக்லைன் மூலம் பள்ளம் தோண்டினார்.அதன் அருகே சாலை திடீரென
 கடலுாரில் சாலை சரிந்து போக்குவரத்து பாதிப்பு

கடலுார் : கடலுார் செம்மண்டலம் அருகே சாலை சரிந்து பள்ளம் ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.கடலுார் செம்மண்டலத்தில் இருந்து கம்மியம்பேட்டை வழியாக இணைப்பு சாலை உள்ளது.

இதன் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.செம்மண்டலம் அருகே இச்சாலையோரம் நேற்று தனிநபர் ஒருவர் கட்டடம் கட்ட பொக்லைன் மூலம் பள்ளம் தோண்டினார்.அதன் அருகே சாலை திடீரென சரிந்து பள்ளம் ஏற்பட்டது. அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து வாகனங்களை நிறுத்தினர்.அவ்வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தகவலறிந்த போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து வாகனங்களை பாதுகாப்புடன் செல்ல அறிவுறுத்தினர். அதையடுத்து போக்குவரத்து சீரானது. தொடர்ந்து சாலை பள்ளம் சீரமைக்கும் பணி நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X