பொது செய்தி

தமிழ்நாடு

விற்பனை பிரதிநிதியின் கைப்பை 'அபேஸ்'

Added : நவ 18, 2021
Share
Advertisement
சென்னை : மருத்துவமனை வெளியே நிறுத்தப்பட்டிருந்த, விற்பனை பிரதிநிதியின் இருசக்கர வாகனத்திலிருந்த கைப்பையை, மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.தண்டையார்பேட்டை, நேரு நகர், 12வது தெருவைச் சேர்ந்தவர் பரத், 23; தனியார் நிறுவன விற்பனைப் பிரதிநிதி. இவர் நேற்று முன்தினம் இரவு, ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில், டாக்டர் ஒருவரை சந்திக்க இருசக்கர வாகனத்தில்

சென்னை : மருத்துவமனை வெளியே நிறுத்தப்பட்டிருந்த, விற்பனை பிரதிநிதியின் இருசக்கர வாகனத்திலிருந்த கைப்பையை, மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

தண்டையார்பேட்டை, நேரு நகர், 12வது தெருவைச் சேர்ந்தவர் பரத், 23; தனியார் நிறுவன விற்பனைப் பிரதிநிதி. இவர் நேற்று முன்தினம் இரவு, ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில், டாக்டர் ஒருவரை சந்திக்க இருசக்கர வாகனத்தில் சென்றார். வாகனத்தை வெளியே நிறுத்திவிட்டுச் சென்றார்.டாக்டரை சந்தித்து விட்டு, வெளியே வந்து பார்த்த போது, வாகனத்தில் வைத்திருந்த கையடக்க மடிக்கணினி அடங்கிய கைப்பையை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது. புகாரின்படி, ஆயிரம் விளக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X