பொது செய்தி

தமிழ்நாடு

கொடுங்கையூர் கிடங்கு வெளியே அதிகளவில் குவிந்துள்ள குப்பை

Added : நவ 18, 2021
Share
Advertisement
கொடுங்கையூர் : கொடுங்கையூர் குப்பைக் கிடங்கின் வெளியில், அதிகளவில் குப்பை குவிந்துள்ளதால், அப்பகுதி மக்கள் தொற்று நோய் அபாயத்தில் உள்ளனர்.சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட முதல் எட்டு மண்டலங்களில் இருந்து, தினமும் சேகரிக்கப்படும் 2,500 டன் குப்பை, கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் கொட்டப்படுகிறது.இந்நிலையில், இந்த குப்பைக் கிடங்கின் வெளிப்புறம், அதிக அளவில் குப்பை

கொடுங்கையூர் : கொடுங்கையூர் குப்பைக் கிடங்கின் வெளியில், அதிகளவில் குப்பை குவிந்துள்ளதால், அப்பகுதி மக்கள் தொற்று நோய் அபாயத்தில் உள்ளனர்.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட முதல் எட்டு மண்டலங்களில் இருந்து, தினமும் சேகரிக்கப்படும் 2,500 டன் குப்பை, கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் கொட்டப்படுகிறது.இந்நிலையில், இந்த குப்பைக் கிடங்கின் வெளிப்புறம், அதிக அளவில் குப்பை குவிக்கப்பட்டுள்ளது.இதனால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் தொற்று அபாயமும் ஏற்பட்டுள்ளது.மேலும், இவ்வழியே செல்லும் நாய் உள்ளிட்ட விலங்குகள் குப்பையை கிளறி, அந்த இடமே கடும் துர்நாற்றம் வீசும் வகையில் உள்ளது.எனவே, குப்பைக் கிடங்கின் வெளியே கொட்டப்பட்டுள்ள குப்பையை, மாநகராட்சி அதிகாரிகள் உடனே அப்புறப்படுத்த வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X