பொது செய்தி

தமிழ்நாடு

பல கோடிகளால் முடியாத விரிவாக்க பணி பல்லாயிரம் கன அடி நீரால் சாத்தியமானது

Added : நவ 18, 2021
Share
Advertisement
எண்ணுார் : பல கோடி ரூபாய் திட்டங்களால் விரிவாக்கம் செய்ய முடியாத முகத்துவாரம், ஆர்ப்பரித்த பல்லாயிரம் கன அடி உபரி நீரால் விரிவடைந்தது.புழல் ஏரி முழு கொள்ளளவை எட்டிய நிலையில், வினாடிக்கு 3,000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது.இந்த உபரி நீரானது நாரவாரிகுப்பம், தண்டல் கழனி, பர்மா நகர் இரும்பு பாலம், சடையங்குப்பம், எண்ணுார் முகத்துவாரம் வழியாக வங்க கடலில் கலந்தது.இதே
 பல கோடிகளால் முடியாத விரிவாக்க பணி பல்லாயிரம் கன அடி நீரால் சாத்தியமானது

எண்ணுார் : பல கோடி ரூபாய் திட்டங்களால் விரிவாக்கம் செய்ய முடியாத முகத்துவாரம், ஆர்ப்பரித்த பல்லாயிரம் கன அடி உபரி நீரால் விரிவடைந்தது.

புழல் ஏரி முழு கொள்ளளவை எட்டிய நிலையில், வினாடிக்கு 3,000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது.இந்த உபரி நீரானது நாரவாரிகுப்பம், தண்டல் கழனி, பர்மா நகர் இரும்பு பாலம், சடையங்குப்பம், எண்ணுார் முகத்துவாரம் வழியாக வங்க கடலில் கலந்தது.இதே போல், பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் இருந்து திறக்கப்பட்ட, 18 ஆயிரம் கன அடி உபரி நீர் மணலிபுதுநகர், இடையஞ்சாவடி, சடையங்குப்பம், எண்ணுார் முகத்துவாரம் வழியாக கடலில் கலந்தது. வடசென்னையில் தேங்கிய ஒட்டுமொத்த மழை நீரும், பகிங்ஹாம் கால்வாய் வழியாக வெளியேற்றப்பட்டது.

புழல், பூண்டி மற்றும் பகிங்ஹாம் கால்வாய் என, மூன்று நீர்நிலைகள் வழியாக ஆர்ப்பரித்த, பல்லாயிரம் கன அடி உபரி நீரும், எண்ணுார் முகத்துவாரம் வழியாகவே கடலில் கலந்தது.ஆனால், கடல் அலை வாட்டம் காரணமாக, முகத்துவாரத்தை, 60 சதவீதம் அளவிற்கு மணல் மேடுகள் ஏறி அடைத்துள்ளது. எனவே, பருவமழைக்கு முன்பே முகத்துவாரத்தை துார் வார வேண்டும் என, நம் நாளிதழில் பல முறை செய்தி வெளியானது.பல கோடி ரூபாய் மதிப்பில், முகத்துவாரத்தை துார் வார பல திட்டங்கள் போட்டும், ஆமை வேகத்திலேயே பணிகள் நடந்தன. முகத்துவாரம் முழுமையாக துார் வாரப்படவில்லை.இந்நிலையில், சமீபத்தில் ஏரிகள் மற்றும் பகிங்ஹாம் கால்வாயில் ஆர்ப்பரித்த உபரி மற்றும் மழை நீர், முகத்துவார மணல் மேடுகளை அரித்துக் கொண்டு கடலில் கலந்தது. அதன் காரணமாக, முகத்துவாரம் தானாகவே பல அடி துாரத்திற்கு விரிவடைந்து விட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X