தமிழ்நாடு

கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி.. போடப்படுமா? .மாவட்டத்தில் நோய் பரவல் அதிகரிப்பு

Added : நவ 18, 2021
Share
Advertisement
மழைக்காலத்தில் கால்நடைகளை கோமாரி எனும் கொடிய நோய் தாக்குகிறது. நோய் தாக்கிய மாடுகளின் வாய் மற்றும் கால்களில் கொப்பளங்கள் ஏற்படும். உரிய சிகிச்சை அளிக்காத நிலையில் தீவனம் உண்ண முடியாமல் இறந்துவிடும்.எனவே நோய் தீவிரத்தை உணர்ந்து,ஆண்டு தோறும் பசு, எருமை மாடுகளுக்கு கோமாரி நோய் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் தடுப்பூசி
கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி.. போடப்படுமா?    .மாவட்டத்தில் நோய் பரவல் அதிகரிப்பு

மழைக்காலத்தில் கால்நடைகளை கோமாரி எனும் கொடிய நோய் தாக்குகிறது. நோய் தாக்கிய மாடுகளின் வாய் மற்றும் கால்களில் கொப்பளங்கள் ஏற்படும். உரிய சிகிச்சை அளிக்காத நிலையில் தீவனம் உண்ண முடியாமல் இறந்துவிடும்.

எனவே நோய் தீவிரத்தை உணர்ந்து,ஆண்டு தோறும் பசு, எருமை மாடுகளுக்கு கோமாரி நோய் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் தடுப்பூசி போடப்படுகிறது.மழைக் காலத்திற்கு முன்பே மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இப்பணி தொடங்கும், நவம்பரில் பருவமழை தொடங்கும் முன்னதாக தடுப்பூசி போடப்பட்டுவிடும்.

இதனால், மழைக்காலங்களில் கால்நடைகள் கோமாரி நோயில் இருந்து காப்பாற்றப்படும். ஆனால், இந்த ஆண்டு பருவமழை தொடங்கிய நிலையிலும் கடலுார் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி போடப்படவில்லை.இதனால், கடலுார் மாவட்டத்தில் பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், புவனகிரி, திட்டக்குடி பகுதிகளில் கால்நடைகளுக்கு பரவலாக கோமாரிநோய் பரவி வருகிறது.

பாதிக்கப்பட்ட கால்நடை வளர்ப்போர், கால்நடைத்துறையிடம் தகவல் தெரிவிக்க, மத்திய அரசிடம் இருந்து கோமாரி நோய் தடுப்பு தடுப்பூசி வரவில்லை, வந்தவுடன் விரைவில் போடப்படும் என, தெரிவிக்கின்றனர்.இதனால் வேறு வழியின்றி, நோய் பாதித்த கால்நடைகளை மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கும் நிலையில் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.மாவட்டம் முழுவதும் கால்நடைகளுக்கு நோய் தாக்கம் அதிகரித்துள்ளதால் கால்நடைத்துறை சார்பில் பொது சிகிச்சை முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாக கால்நடைத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் சில மாவட்டங்களில் கோமாரி தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது. கடலுார் மாவட்டத்திற்கு 3 லட்சம் டோஸ் மத்திய அரசிடம் கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.எனவே, ஏழை மக்களின் வாழ்வாதாரமாக உள்ள கால்நடைகளை, கோமாரி நோய் தாக்காமல் தடுக்க விரைவில் தடுப்பூசி போட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X