சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீட்டில் புகுந்து நகை திருட்டு தாய், மகன் உட்பட மூவர் கைது

Added : நவ 18, 2021
Share
Advertisement
புழல் : புழல் அருகே, வீட்டில் புகுந்து நகை திருடிய தாய், மகன் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.புழல் அடுத்த வினாயகபுரம், சூர்யா நகரைச் சேர்ந்தவர் மோகன்குமார், 44; தனியார் நிறுவன ஊழியர். இவர், கடந்த மாதம் 25ம் தேதி காலை, அலுவலகத்திற்கு செல்லும் அவசரத்தில், கவனக்குறைவாக வீட்டை பூட்டாமல் சென்றுள்ளார்.இதையடுத்து, அவரது வீட்டு பீரோவில் இருந்த, 24 சவரன் நகை திருடு போனது. இது

புழல் : புழல் அருகே, வீட்டில் புகுந்து நகை திருடிய தாய், மகன் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.

புழல் அடுத்த வினாயகபுரம், சூர்யா நகரைச் சேர்ந்தவர் மோகன்குமார், 44; தனியார் நிறுவன ஊழியர். இவர், கடந்த மாதம் 25ம் தேதி காலை, அலுவலகத்திற்கு செல்லும் அவசரத்தில், கவனக்குறைவாக வீட்டை பூட்டாமல் சென்றுள்ளார்.இதையடுத்து, அவரது வீட்டு பீரோவில் இருந்த, 24 சவரன் நகை திருடு போனது. இது குறித்து, புழல் போலீசார் விசாரித்தனர்.இதில், ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த ஆதித்யா, 25, அவரது தாய் லட்சுமி, 40, ஆகியோர் சிக்கினர். இவர்கள், சம்பவத்தன்று, மோகன்குமாரின் வீட்டருகே உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர்.அப்போது, மோகன்குமாரின் வீடு பூட்டப்படாமல் இருப்பதை அறிந்து, உள்ளே நுழைந்து நகை திருடியது தெரிய வந்தது.

அந்த நகையை, ஆதித்யா, பொன்னேரியைச் சேர்ந்த தன் நண்பர் தேவராஜ், 26, என்பவரிடம் கொடுத்து, தனியார் நிறுவனத்தில் அடகு வைத்து, பணம் பெற்றது தெரிய வந்தது.இதையடுத்து, நேற்று மூவரையும் கைது செய்த புழல் போலீசார், அவர்களிடம் இருந்து 20 சவரன் நகையை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X