பொது செய்தி

தமிழ்நாடு

மழையில் சாய்ந்த மரங்கள் தன்னார்வலர்கள் மறுநடவு

Added : நவ 18, 2021
Share
Advertisement
வேளச்சேரி : பெருங்குடி மற்றும் வேளச்சேரி ரயில் நிலையம் அருகில், மழையால் சாய்ந்த சிறிய வகை மரங்களை, மறு நடவு செய்யும் பணியில் பசுமை ஆர்வலர்கள் ஈடுபட்டனர்.வேளச்சேரி மற்றும் பெருங்குடி ரயில் நிலையம் இடைப்பட்ட பகுதியை பசுமையாக்க, 'கிரீன் வேளச்சேரி' அறக்கட்டளை முடிவு செய்துள்ளது.இதற்காக, சில மாதங்களாக, புதர்களை அகற்றி சுத்தம் செய்து, மரக்கன்றுகள் நட்டு வருகின்றனர்.
 மழையில் சாய்ந்த மரங்கள் தன்னார்வலர்கள் மறுநடவு

வேளச்சேரி : பெருங்குடி மற்றும் வேளச்சேரி ரயில் நிலையம் அருகில், மழையால் சாய்ந்த சிறிய வகை மரங்களை, மறு நடவு செய்யும் பணியில் பசுமை ஆர்வலர்கள் ஈடுபட்டனர்.

வேளச்சேரி மற்றும் பெருங்குடி ரயில் நிலையம் இடைப்பட்ட பகுதியை பசுமையாக்க, 'கிரீன் வேளச்சேரி' அறக்கட்டளை முடிவு செய்துள்ளது.இதற்காக, சில மாதங்களாக, புதர்களை அகற்றி சுத்தம் செய்து, மரக்கன்றுகள் நட்டு வருகின்றனர். தண்ணீர் ஊற்றி பராமரிக்க, தண்ணீர் தொட்டியும் அமைத்துள்ளனர். சிறுவர், சிறுமியருக்கு மரக்கன்று நட்டு பராமரிக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது.இது ஒருபுறமிருக்க, கடந்த வாரம் பெய்த மழையில், சில மரங்கள் வேரோடும், கிளைகள் ஒடிந்தும் சாய்ந்தது. இதை, மறுநடவு செய்யும் பணியில், கிரீன் வேளச்சேரி அறக்கட்டளை தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். வேரோடு சாய்ந்த மரத்தில் கிளைகளை வெட்டி, பிடிமானத்துடன் வளர பள்ளத்தை பலப்படுத்தி அதில் மீண்டும் நட்டனர்.சில மரங்களில், கிளைகள் ஒடிந்து சாய்ந்தது. அதை கயிறு கட்டி பலப்படுத்தி நட்டனர். இதன்மூலம், மரங்களின் எண்ணிக்கை குறைவது தடுக்கப்படும் என, தன்னார்வலர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X