பொது செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: தந்தை வழியில் நடக்கணும்!

Updated : நவ 18, 2021 | Added : நவ 18, 2021 | கருத்துகள் (144)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:ரா.முத்துசாமி, கோவையிலிருந்து எழுதுகிறார்:ஜெய்பீம் பட வாயிலாக இரு சமூகத்துக்கு இடையே பகையுணர்வு துாண்டப்பட்டு இருப்பதாக, தயாரிப்பாளரும், நடிகருமான சூர்யாவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து, அந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.சம்பந்தப்பட்ட வழக்கில்
சூர்யா, நடிகர், தந்தை, வழியில் நடக்கணும், சிவகுமார், ஜெய்பீம்


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:



ரா.முத்துசாமி, கோவையிலிருந்து எழுதுகிறார்:

ஜெய்பீம் பட வாயிலாக இரு சமூகத்துக்கு இடையே பகையுணர்வு துாண்டப்பட்டு இருப்பதாக, தயாரிப்பாளரும், நடிகருமான சூர்யாவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து, அந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட வழக்கில் குறிப்பிடப்பட்டிருக்கும் உண்மையான பெயரான 'அந்தோணிசாமி' என்பதை வேண்டுமென்றே, 'குருமூர்த்தி' என மாற்றியுள்ளனர்.படத்தில் கொடுமைக்கார போலீஸ் எஸ்.ஐ., கதாபாத்திரத்தை, ஒரு ஜாதிப் பிரிவைச் சேர்ந்தவர் போல சித்தரித்துள்ளனர்.ஜெய் பீம் படம் எடுக்க, உண்மை சம்பவத்தில் காரணமாயிருந்த நபர், அரசு பதிவேட்டின்படி, 32 திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர்; இருவரை கொலை செய்துள்ளார்.ஆறு வழக்குகளில், திருட்டை தடுக்க முயன்ற வீட்டின் உரிமையாளர்களை கொடூரமாக தாக்கியுள்ளார்.

அப்படிப்பட்ட திருடனை, மிகச் சிறந்த மனிதராக காட்டி படமெடுத்துள்ளனர் என்ற விமர்சனங்களும் முன் வைக்கப்படுகின்றன.இப்படத்துக்கு 10 கோடி ரூபாய் செலவிட்ட சூர்யா, 70 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளாராம்.இப்படம், 'ஓடிடி'யில் வெளியிடப்பட்டது. இதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், தன் அடுத்த படத்தை, 'சன் பிக்சர்ஸ்' நிறுவனத்திற்கு கொடுத்துள்ளார், சூர்யா. இதிலிருந்தே அவரின் கெட்டிக்காரத்தனம் தெரிகிறது. படத்தை, 'சன் பிக்சர்ஸ்' வழங்கினால், எந்த தியேட்டர் உரிமையாளர்களும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள் என, விபரமாக யோசித்து முடிவெடுத்து உள்ளார்.சூர்யா...

நீங்கள் எவ்வளவு கோடி ரூபாய் சம்பாதிக்கின்றீர்கள் என்பது, ஒரு பிரச்னையே இல்லை; நீங்கள் சம்பாதிக்கக் கூடாதென நாங்கள் சொல்லவும் இல்லை. இன்னும் பல 100 கோடி ரூபாய் நீங்கள் சம்பாதிக்க வேண்டும். ஏழைகளுக்கு நிறைய உதவ வேண்டும். தமிழகத்தில் 100 கோடி ரூபாய் சம்பாதித்த எந்த நடிகரும் செய்யாத உதவிகளை செய்து, மக்களிடம் நல்ல பெயர் பெற வேண்டும்.உங்களுக்கு, அரசியலுக்கு வரும் ஆசையிருக்கலாம்.


latest tamil news


ஆனால், ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் குருவாக நினைக்கும் நடிகர் கமல், அரசியலில் பிரகாசிக்க முடியவில்லை.மக்கள், அவரை நடிகராகத் தான் பார்க்கின்றனரே தவிர, அரசியல் தலைவராக ஏற்கவில்லை.அதனால், நீங்கள் நடிகராக இருந்தே உதவிகளை செய்யுங்கள். நம் பின்னால், ஜாதி இருக்கு; நமக்கு ஆதரவு தருவர் என நம்ப வேண்டாம்.தேர்தலில், அந்தந்த தொகுதியில் எந்த ஜாதியைச் சேர்ந்தோர் அதிகம் வசிக்கின்றனரோ, அதே ஜாதியை சேர்ந்தவரையே தங்கள் வேட்பாளராக, அரசியல் கட்சிகள் நிறுத்துகின்றன.

அதனால், ஜாதி பின்புலம் உங்களுக்கு உதவாது.உங்களின் அரசியல் ஆர்வத்துக்கு, நிச்சயம் மக்கள் ஆதரவு கிடைக்காது; அவர்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல. அரசியலுக்கு அப்பாற்பட்ட நடிகராகவே உங்களை பார்க்கின்றனர்; அவ்வாறே நீங்களும் இருங்கள்.உங்களின் தந்தை சிவக்குமார் எவ்வாறு நல்ல பெயர் சம்பாதித்தாரோ, அதே வழியில் நீங்களும் பயணியுங்கள்; அதுவே, உங்களுக்கு நல்லது!


Advertisement




வாசகர் கருத்து (144)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
19-நவ-202109:13:26 IST Report Abuse
meenakshisundaram தந்தைக்கே இப்ப பார்வைக்கோளாறு யாரேனும் திசை காட்டவேண்டிய நிலை இவர்கள் இந்திய சுதந்திர போராட்ட படம் எடுத்தால் அதில் மஹாத்மா காந்தி பெயரை அந்தோணி டாஸ் என்று சொல்லுவாரா ?
Rate this:
Cancel
jagan - Chennai,இலங்கை
19-நவ-202101:14:57 IST Report Abuse
jagan ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்
Rate this:
Body soda - Bishan,சிங்கப்பூர்
20-நவ-202106:52:00 IST Report Abuse
Body soda@ஜெகன், இங்கே ஊரு இரண்டு பட்டது கூத்தாடியால் தான்...
Rate this:
Cancel
mani - thirumayam,இந்தியா
19-நவ-202100:58:48 IST Report Abuse
 mani ஊர் ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்று ஒரு பழமொழி இருக்கு .சரியாதான் சொன்னார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X