பொது செய்தி

தமிழ்நாடு

நடிகர் சூர்யாவுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

Updated : நவ 18, 2021 | Added : நவ 18, 2021 | கருத்துகள் (56)
Share
Advertisement
சென்னை-நடிகர் சூர்யா வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சூர்யாவுக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.ஜெய்பீம் படம் விவகாரத்தில் நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு, பா.ம.க., தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. 'நடிகர் சூர்யா உள்ளிட்டோர் மன்னிப்பு கேட்க வேண்டும்; இல்லாவிட்டால் 5 கோடி

சென்னை-நடிகர் சூர்யா வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சூர்யாவுக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.latest tamil news


ஜெய்பீம் படம் விவகாரத்தில் நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு, பா.ம.க., தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. 'நடிகர் சூர்யா உள்ளிட்டோர் மன்னிப்பு கேட்க வேண்டும்; இல்லாவிட்டால் 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு தர வேண்டும்' என, வன்னியர் சங்கம் 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.'நடிகர் சூர்யாவை எட்டி உதைக்கும் இளைஞருக்கு, 1 லட்சம் ரூபாய் தரப்படும். சூர்யா தரை வழியாக எங்கும் பயணம் செய்ய முடியாது; வான் வழியாக தான் செல்ல முடியும்' என, பா.ம.க., மயிலாடுதுறை மாவட்ட செயலர் பழனிசாமி மிரட்டியுள்ளார்.


latest tamil news


ஜாதி மோதலை துாண்டும் வகையில் பேசிய பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, திராவிடர் விடுதலை கழகத்தினர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.இந்நிலையில், சென்னை, தி.நகர் ஆற்காடு சாலையில் உள்ள நடிகர் சூர்யா வீட்டிற்கு, நேற்று முன்தினம் இரவு முதல், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவர் செல்லும் இடங்களுக்கு எல்லாம், போலீசார் பாதுகாப்புக்காக செல்கின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Murugan - tokyo,ஜப்பான்
18-நவ-202120:47:48 IST Report Abuse
Murugan OMG, PMK is useless and they should behave like this. What the hell Ramados doing ? Government should control them with gun
Rate this:
Cancel
appavi - cumbum,இந்தியா
18-நவ-202120:42:17 IST Report Abuse
appavi அது எப்படி இந்துக்களுக்கு எதிராக இருக்கும் விஷயங்களில் மட்டும் தமிழக திராவிடம் பொங்குகிறது ....இந்துக்கள் யாராவது சிந்தித்து பேசினால் அவரை சங்கி மங்கி , ஆரியன் , தமிழக திராவிட விரோதி மத வெறியன் என விமர்சனம் செய்து மட்டம் தட்டுவது
Rate this:
Cancel
C.SRIRAM - CHENNAI,இந்தியா
18-நவ-202117:54:46 IST Report Abuse
C.SRIRAM இவரே இஷ்டத்துக்கு படம் எடுப்பாராம் . நல்ல சம்பாதிப்பாராம் . இதனால் வரும் பிரச்சனைகளுக்கு மக்கள் வரி பணத்தில் போலீஸ் பாது காப்பாம் . நல்ல கதை . இவரே சொந்தப்பணத்தில் தனியார் பாது காப்பு சேவையை அமைத்துக் கொள்ள அரசு வலியுறுத்தி ஒதுங்கிக் கொள்ளவேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X