பெண்ணாடம் : பெண்ணாடம் அருகே குடிநீர் வழங்கக்கோரி, கிராம மக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டதால் விருதை - பவழங்குடி சாலையில் 45 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.பெண்ணாடம் அடுத்த மருங்கூர், பண்ணமேட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
இங்குள்ள 1 மேல்நிலை குடிநீர் தொட்டி, 1 மினி டேங்க் மூலம் குடிநீர் வழங்கப்பட்டது. 3 மாதங்களுக்கு முன் மோட்டார்கள் பழுதானதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.பழுதான மோட்டார்களை சீரமைத்து குடிநீர் வழங்க வேண்டும் என இப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடமும், ஒன்றிய அதிகாரிகளிடமும் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை 8:30 மணியளவில், பஸ் நிறுத்தம் அருகே விருதை - பவழங்குடி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் மற்றும் போலீசார் கிராம மக்களிடம் பேசி சமாதானம் செய்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.அதையேற்று காலை 9:15 மணி யளவில் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் விருதை - பவழங்குடி சாலையில் 45 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE